ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஒரே பேரில் வித்தியாசம் காட்டிய 5 கேரக்டர்கள்.. இப்படி ஒரு லவ் கிடைக்காதா என ஏங்க வைத்த 96 ராம்

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களின் கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட சில பெயர்களை அடிக்கடி வைப்பார்கள். அதாவது சிவா, சூர்யா, விஜய் போன்ற பெயர்களை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதேபோன்று ராம் என்ற பெயரும் பல கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஒரே பெயரை வைத்துக் கொண்டு வித்தியாசம் காட்டிய 5 ஹீரோக்களை பற்றி இங்கு காண்போம்.

ராம்: கடந்த 2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது. அதில் ராம் என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருப்பார். அம்மா மீது அதிக பாசம் கொண்ட பிள்ளையாகவும், குழந்தை மனம் கொண்டவராகவும் நடித்து அவர் அசத்தியிருப்பார். அதிலும் இப்படத்தில் வரும் ஆராரிராரோ என்ற பாடல் இப்போதும் கூட பலரின் விருப்ப பாடலாக இருக்கிறது. அந்த வகையில் அம்மா பிள்ளையான இந்த ராம் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

Also read: அவுட் ஆப் சினிமா என்றாலும் மனதில் நங்கூரம் போட்ட 6 ஹீரோயின்.. ஒத்த பாட்டில் கிரங்கடித்த வாழ மீன்

சீதாராமம்: கடந்த வருடம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் ராம் என்ற கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்திருப்பார். முகம் தெரியாத காதலியை நினைத்து ஏங்குவதில் இருந்து அவரை பார்க்கும் போது சிரிப்பின் மூலம் காதலை உணர்த்துவது வரை ஒவ்வொரு காட்சியிலும் அவர் கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். அந்த வகையில் இந்த சாக்லேட் பாய் ராம் அனைவரையும் கவர்ந்து 4-ம் இடத்தில் இருக்கிறார்.

3: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் வித்தியாசமான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வது போன்று கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதில் அவர் தன் நண்பனை மிருகத்தனமாக அடிப்பது, பின்னர் அவரை கட்டிக் கொண்டு அழுவது போன்ற எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அந்த வகையில் இந்த சைக்கோ ராம் 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: ஆர்யாவின் நடிப்பில் உருவாகும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.. இணையத்தில் மிரட்டும் டீசர்

96: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அதில் அவர்கள் இருவரும் ராம், ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பள்ளி பருவத்தில் இருந்தே ஜானுவை காதலிக்கும் ராம் அந்த காதல் கை கூடாததால் சிங்கிளாகவே இருப்பார். அதிலும் தன் காதலி திருமணம் ஆகி செட்டிலான பிறகும் கூட அவரையே நினைத்துக் கொண்டு வாழும் கேரக்டரில் விஜய் சேதுபதி அசத்தியிருப்பார். அந்த வகையில் இப்படி ஒரு லவ் கிடைக்காதா என பல இளம் பெண்களை ஏங்க வைத்த இந்த ராம் 2-ம் இடத்தில் இருக்கிறார்.

பஞ்சதந்திரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல், சிம்ரன் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் ராம் என்ற பெயருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் பல பெண்களுடன் லூட்டி அடிப்பவராக கமல் தெறிக்க விட்டிருப்பார். அந்த வகையில் இதுவரை பார்த்த நான்கு ராம்களில் இவர் ஒரு ப்ளே பாயாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: முதன் முதலில் சூப்பர் ஸ்டார் டைட்டில் போடப்பட்ட படம்.. ரஜினியை எப்போதும் சுற்றி வரும் பாம்பு செண்டிமெண்ட்

Trending News