ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆக்ஷனில் சொதப்பிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. செட்டாகாது தயவு செய்து விட்டுருங்க

ஒரு சில படங்களிலேயே பெண் ரசிகர்களை கவர்ந்து சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர்கள் ஆக்ஷன் கதைகளில் இறங்கி தனது பெயரை கெடுத்து கொண்டுள்ளனர். அவ்வாறு சாக்லேட் ஹீரோக்களாக இருந்த நடிகர்கள் ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என சொதப்பிய 5 ஹீரோக்களை தற்போதும் பார்க்கலாம்.

ஷாம் : குழந்தையைப் போன்ற முகம் பாவம் உடைய ஷாம் ஆரம்பத்தில் மென்மையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்பின்பு ஆக்ஷன் படங்களில் நடிக்கலாம் என்று பாலா படத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தார். ஆனால் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் ஷாமுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

சித்தார்த் : அதிக பெண் ரசிகர்களை கவர்ந்தவர் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த்துக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் மாதவன், சூர்யா நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து என்ற ஆக்ஷன் படத்தில் சித்தார்த் நடித்திருந்தார். இப்படம் சித்தார்த்தின் கேரியரில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது.

அதர்வா : பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்த அதர்வா சண்டி வீரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போதும் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டுமென அதர்வா போராடி வருகிறார்.

பிரசன்னா : 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பிரசன்னா. அதன்பிறகு அழகிய தீயே, கண்ட நாள் முதல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அஞ்சாதே படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. ஆனால் பானா காத்தாடி படத்தில் இவரது ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்கப் படவில்லை.

ஹரிஷ் கல்யாண் : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் ஹரிஷ் கல்யாண நடித்த சில ஆக்ஷன் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

Trending News