வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது.. வள்ளல்களாய் மாறிய 5 சினிமா நட்சத்திரங்கள்

5 Tamil Actors : திரை துறையில் இருக்கும் பிரபலங்கள் என்னதான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் அது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதற்காக அவர்களும் பாடுபட வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சம்பார்த்தனையில் இருந்து ஒரு பகுதியை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதிலும் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் நிஜ வாழ்க்கையில் வள்ளலாக மாறி, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் 5 பிரபலங்களை பற்றி பார்ப்போம். 

பிரகாஷ் ராஜ்: தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மிரட்டிய பிரகாஷ்ராஜ், நிஜ வாழ்க்கையில் வேறொரு முகம் கொண்டவர். பிரகாஷ் ராஜ் ஒரு கிராமத்தையே தத்தெடுத்து காப்பாற்றிக்  கொண்டிருக்கிறார். அந்த கிராமத்திற்கு ரோடு, தண்ணீர் போன்ற வசதிகளை அமைத்துக் கொடுத்து ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை தன்னுடைய சொந்த பணத்தில் செய்து  கொடுத்துள்ளார். 

Also Read: லியோ படத்தின் ஹைப்பை அதிகரிக்க செய்த வேலை.. நாலா பக்கமும் அடிபட்டு வரும் விக்ரம்

ராகவா லாரன்ஸ்: டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் கலக்கிய ராகவா லாரன்ஸ் இப்போது படங்களை  நடித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் தனது டிரஸ்ட் மூலம் நிறைய  மாணவர்களுக்கு படிப்பு உதவி செய்கிறார்.

பாலா: சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் கேபிஒய் புகழ் பாலா, சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் மலை வாழ் மக்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 8,000 மக்கள் அந்த ஆம்புலன்ஸ் மூலம் பயனடைகின்றனர்.

Also Read: நடிகைகளை தொடாமல், புகை பிடிக்காமல் நடித்த ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க ரோலக்ஸ்

விக்ரம்: சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் தான் விக்ரம். இவர் தான் சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழை எளிய மக்களுக்காக செலவு செய்வதில் மிகுந்த சந்தோஷம் அடைவாராம். இவர் நிறைய ஏழை மக்களின் கண் ஆபரேஷனுக்கு உதவி செய்கிறார். வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் விக்ரம், தான் செய்யும் உதவியை வெளியில் தெரியாத அளவுக்கு சீக்ரெட் ஆகவே செய்து வருகிறார்.

சூர்யா: தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா, கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் சினிமாவை தாண்டி சமூக அக்கறையும் கொண்டவர். இவர் அகரம் என்ற  தன் அறக்கட்டளை மூலம் கஷ்டப்படுபவர்களுக்கு படிப்பு கொடுக்கிறார்.  இவருடைய அறக்கட்டளை மூலம் படித்து நல்ல நிலைமைக்கு பல மாணவ மாணவிகள் வந்திருக்கின்றனர்.

Also Read: முரட்டு மொட்டை லுக்கில் கதிகலங்க வைத்த விக்ரம்.. லோகேஷால் எடுக்கும் புது அவதாரம்

Trending News