திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்.. கவுண்டமணி இடத்திற்கு அடிபிடி போட்ட 5 காமெடியன்கள்

ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும் என்பதை போல நகைச்சுவை மூலமாக மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் கவுண்டமணி. இவர் பின் எண்ணற்ற காமெடியன்கள் தோன்றினாலும் இவரின் திறமைக்கும் நிகராக இருக்க முடியாது.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உள்ளது என்பதை போல, ஒவ்வொருவரின் நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டாலும் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட முடியாது அவ்வாறு கவுண்டமணி இடத்தை பிடிக்க நினைத்த 5 நகைச்சுவை நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

எஸ் எஸ் சந்திரன்: 80- 90களில் தோன்றிய இவரின் நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். பல பிரபலங்களோடு இணைந்து கலக்கிய இவரின் நகைச்சுவை பல விருதுகளை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக ரஜினியுடன் மாப்பிள்ளை, உழைப்பாளி போன்ற படங்களில் இவரின் நடிப்பு அசத்தலாக இருக்கும். இத்தகைய கலைஞனை தமிழ் சினிமா இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னி ஜெயந்த்: 1984ல் வெளியான கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சின்னி ஜெயந்த். பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார். 30 வருடத்திற்கு மேல் திரைத்துறையில் சாதித்த இவர் பல விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 60 வயதை தாண்டி அந்தரங்க தொழில் செய்த நடிகை.. பல வருடங்களுக்குப் பிறகு அம்பலமான சம்பவம்

மணிவண்ணன்: பன்முகத் திறமை கொண்ட இவர் பிரபலங்களோடு இணைந்து அசத்திய நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். கவுண்டமணி செந்திலுக்கு நிகராக இவரின் குசும்பு காமெடிகளும் பெரிதளவில் பேசப்பட்டது. இத்தகைய கலைஞரை தமிழ் சினிமா இழந்து தவித்து வருகிறது.

பாண்டியராஜன்: கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பதை போல இவரின் எதார்த்தமான நகைச்சுவை மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. நடிகராக இருந்து சில படங்களில் நடித்தும், நகைச்சுவை நடிகராகவும் கலக்கி தற்பொழுது சப்போட்டிங் ஆர்டிஸ்ட் ஆக களம் இறங்கி வருகிறார் பாண்டியராஜன்.

Also Read: 2வது பெரிய கட்சி நாங்க தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் தரப்பு

ஜனகராஜ்: சுமார் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர் தான் ஜனகராஜ். இவர் பிரபலங்களான கமல், ரஜினியுடன் இணைந்து கலக்கிய காமெடிகள் மாபெரும் ஹிட் கொடுத்தது. தற்பொழுது சினிமாவிற்கு இடைவெளி விட்டு காணப்பட்டு வருகிறார் ஜனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News