தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகர்களின் பங்களிப்பானது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இப்படி காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ஒரு சில நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். மேலும் இவர்கள் தங்களது படங்களில் காமெடியையும் தாண்டி குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளனர். அப்படியாக குணச்சித்திர கேரக்டரிலும் கலக்கிய ஐந்து காமெடி நடிகர்களின் படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
செம்பி: தமிழ் சினிமாவில் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் காமெடி நடிகை கோவை சரளா. பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் காமெடியையும் தாண்டி செம்பி திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அது மட்டுமல்லாமல் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு பல விருதுகளையும் வாங்கி குவித்தது என்றே சொல்லலாம்.
Also Read: அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா
மண்டேலா: தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் எக்கச்சக்க பட வாய்ப்புகளை பெற்று வருபவர் தான் நடிகர் யோகி பாபு. அதிலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். அதிலும் 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா திரைப்படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். அதிலும் ஒரு ஓட்டை கையில் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளுக்கே ஆட்டம் காட்டும் மண்டேலா என்னும் கேரக்டரில் யோகி பாபு நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
விடுதலை: தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிசயமான நடிகராக வலம் வந்தவர் தான் பரோட்டா சூரி. அதனைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் தற்பொழுது காமெடியையும் தாண்டி குணச்சித்திரம் மற்றும் ஹீரோ கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரியின் நடிப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். இதில் சூரி போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்து அசத்தியிருந்தார்.
Also Read: இனி நடிச்சா ஹீரோ தான்.. சூரியை தூக்கிவிட துணையாய் நிற்கும் தனுஷின் நெருங்கிய வட்டாரம்
மைனா: தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளைக் கொண்ட திகழ்பவர் தான் நடிகர் தம்பிராமையா. மேலும் கும்கி, கழுகு, தலைவா போன்ற திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சாட்டை, அடுத்த சாட்டை போன்ற படங்களில் காமெடி கலந்த வில்லத்தனத்திலும் மிரட்டி இருப்பார். அதிலும் மைனா படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த துணை கதாபாத்திரத்திற்காக தேசிய விருதினையே பெற்று தந்தது என்றே சொல்லலாம்.
ஆதார்: தமிழ் சினிமாவில் லொடுக்கு பாண்டியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகர் கருணாஸ். காமெடி நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காமெடியையும் தாண்டி குணச்சித்திர கேரக்டரிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஆதார் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் கருணாஸ் தனது சிறப்பான நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்.