இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கிய 5 பேர்.. பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்ட பிளேபாய்

Bigg Boss Season 7 Nomination List: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்துவிட்டது. கிராண்ட் பினாலேவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சியும் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது. அதிலும் இந்த வாரம் கேப்டனாக பதவி ஏற்றிருக்கும் விஷ்ணுவால் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீடே போர்க்களமாக மாறிவிட்டது.

மாயா கேப்டன்ஷிப் பதவியில் இருந்த போது எப்படி இருந்ததோ, அதைவிட மோசமாக விஷ்ணுவின் கேப்டன்ஷிப் இருக்கிறது. இந்த சூழலில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மொத்த போட்டியாளர்களும் கடந்த வாரம் ஓவரா ஆடுன பிளேபாயை வச்சு செஞ்சு விட்டனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக மட்டுமல்லாமல் அரசனாகவும் மணிமகுடம் சூடியவர் தான் நிக்சன். இவருடைய கேப்டன்ஷிப் சக போட்டியாளர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை. அதிலும் மாயா, பூர்ணிமா இருவருக்கும் இவர் செய்த பேவரடிசத்தால் இப்போது மோசமான விளைவை சந்தித்திருக்கிறார்.

Also read: பிக் பாஸ் சீசன் 7ல் அதிகம் பேசப்பட்ட டாப் 5 பிரபலங்கள்.. வரலாற்றையே புரட்டி போட்ட கிளாமர் குயின்

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்

இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸில் எல்லோருடைய வாயிலும் நிக்சன் பெயர்தான் வருகிறது. இவர் மட்டுமல்ல இவருடன் மொத்தமாக ஐந்து போட்டியாளர்கள் இந்த வார எவிக்சன் ப்ராசஸ்க்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

நிக்சனைத் தொடர்ந்து விசித்ரா, மணி, அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுள் நிக்சன் அல்லது மணி இருவருள் ஒருவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: ஜோவிகாவை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகும் பிக் பாஸ்.. ரிவ்யூ ஷோவில் சீக்ரெட்டை உளறிய வனிதா