சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

உங்க 5 பேருக்கு தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல.. கேமராவில் சிக்கிய காஜி ஜோடிகள்

BB7 Tamil: விஜய் டிவியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சைக்குரிய இடம் என்றால் அது ஸ்மோக்கிங் ஏரியா தான். அவ்வளவு பெரிய வீட்டில் பண்ண முடியாத பிளான் எல்லாம் அந்த சின்ன ஸ்மோக்கிங் ஏரியாவுக்குள் தான் நடந்தேறும். அப்படித்தான் இந்த சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஸ்மோக்கிங் ஏரியா அதிக அளவில் கண்காணிக்கப்படுகிறது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மோக்கிங் ரூம் உள்ளே கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. யார் உள்ளே சென்று புகை பிடித்தாலும் அது ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் தமிழில் அந்த வெளிப்படத் தன்மையில்லாமல் இருப்பது தான் நிறைய வதந்திகளுக்கு காரணமாக இருக்கிறது. இதனால் தான் அங்கு கேமரா வைக்க வேண்டும் என பிக் பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புகை விட்டு தள்ளும் போட்டியாளர்கள்

இந்த சீசனில் ஐஷு மற்றும் நிக்சன் ஸ்மோக்கிங் ஏரியாவில் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என ஒரு வீடியோ கிளிப் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகியது. அதிலிருந்து இந்த ஸ்மோக்கிங் ஏரியா இன்னும் அதிகமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த ஸ்மோக்கிங் ரூமில் அதிக நேரத்தை செலவிடுவது விஜே அர்ச்சனா தான்.

Also Read:நிக்சனைப் போல் விதியை மீறிய மணி.. கண்டுக்காமல் போன பிக்பாஸ், காரணம் இதுதான்

சிகரெட்டை அடித்த பிறகு தான் தனக்கு தூக்கமே வரும் என்பது போல் இரவில் பாட்டு பாடி டயர்டான அர்ச்சனா அடுத்து செல்வது ஸ்மோக்கிங் ஏரியாவுக்குத்தான். அவரை தொடர்ந்து அந்த ரூமில் அடிக்கடி தென்படுவது நிக்சன். பிக் பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நிக்சன் புகைபிடிக்க செல்வது அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

நேற்றைய பிக் பாஸ் லைவ் ஸ்ட்ரீமில் நிக்சன் ஸ்மோக்கிங் ஏரியாவில் இருந்து வெளியில் வரும்போது அவருடன் சேர்ந்து பூர்ணிமாவும் வெளியில் வருகிறார். ஏற்கனவே நிக்சன் மற்றும் பூர்ணிமாவின் அலப்பறைகள் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்கிறது. இதில் பூர்ணிமா புகைபிடிப்பது நேற்றைய வீடியோவில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

இந்த மூன்று பேரைத் தொடர்ந்து அதிகமாக ஸ்மோக்கிங் ஏரியாவில் தென்படுவது மணிச்சந்திரா மற்றும் மாயா. இவர்கள் சிகரெட் பிடிக்கும் செலவெல்லாம் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பினர் உடையதாக தான் இருக்கும். இப்படி ஸ்மோக்கிங் ரூமே கதி என்று கிடந்தால் பிக் பாஸ் மொத்த சொத்தையும் அதற்காகத்தான் செலவிடுவது போல் ஆகிவிடும்.

Also Read:மாயா, கமலுக்காக விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. பிக்பாஸை விட்டு வெளியேறும் பலி ஆடு, ஓட்டிங் லிஸ்ட்

Trending News