வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நீதான் என் உயிர் என்று திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட 5 ஜோடிகள்.. சதியால் பிரிந்து போன சிம்ரன்

Love Failure Actor Actress: சினிமாவில் வெளிவரும் படங்களில் காதல் கல்யாணத்துக்கு உயிரூட்டும் விதமாக கதைகளை அமைத்து படங்களை வெற்றியடைய செய்கிறார்கள். அதிலும் நடிகர்கள் நடிகைகள் தேடி தேடி அவர்கள் காதலித்தவர்களை கரம் பிடித்து விடுகிறார்கள். ஆனால் நிஜக் காதலை உதாசீனப்படுத்தி கோட்டை விட்டு விடுகிறார்கள். அப்படி உருகி உருகி காதலித்த பிறகு கல்யாணம் நேரத்தில் கழட்டிவிட்ட ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.

திரிஷா- வருண் மணியன்: கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் தாண்டியும் தற்போது 40 வயதிலும் இளமை மாறாமல் கனவு கன்னியாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வருண் மணியன் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். அப்படிப்பட்ட இவர்களுடைய காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால் திருமணத்தை எட்டும் தருவாயில் இவர்களுக்குள் என்ன பிரச்சனையோ என்னவோ த்ரிஷா இந்த கல்யாணம் வேண்டாம் என்று நிறுத்திவிட்டார். தற்பொழுது வரை வேறு யாரையும் திருமணம் செய்யாமல் ஹீரோயின் ஆகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

விஷால்- அனிஷா அல்ல ரெட்டி: விஷால், அனுஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதற்காக இவர்களுடைய நிச்சயதார்த்தம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஆனால் திடீரென்று குடும்பத்தில் இருக்கும் பிரச்சினையை காரணமாக காட்டி அனிஷா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார். இவர்களுடைய காதல் நிறைவேறாமல் நிராசையாகவே முடிந்து விட்டது.

பிரபு- குஷ்பூ: இவர்கள் இளம் வயதில் நடித்த படங்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து இவர்கள் ஜோடி நன்றாகவே இருக்கிறது என்று பலரும்வாயடைத்து பார்த்தார்கள். அத்துடன் இவர்களும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்து வந்த நிலையில், பிரபுவின் குடும்பத்தில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த காதல் பாதியிலேயே முடிவடைந்து விட்டது.

Also read: ஐட்டம் டான்ஸ் ஆடியதால் விஷால் அண்ணிக்கு நேர்ந்த கொடுமை.. நேக்கா எஸ்கேப் ஆன சம்பவம்

சிம்ரன்- ராஜுசுந்தரம்: 90களில் கனவு கன்னியாக வந்த சிம்ரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஏக்கத்துடன் பார்த்தார்கள். அப்படிப்பட்ட நடிகை ராஜசுந்தரத்தை மனதார காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதை பார்த்து பலரும் பொறாமைப்படும் அளவிற்கு ஜோடி போட்டு வந்தார்கள். ஆனால் பல சர்ச்சைகளில் சிம்ரன் பெயர் அடிபட்டதால் சதியால் இவர்களுடைய காதல் பிரிந்து போய்விட்டது.

நயன்தாரா- பிரபுதேவா: இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கையை கொஞ்ச நாளாக ஓட்டி வந்தார்கள். இதனை அடுத்து இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வருவதை தொடர்ந்து கூடிய விரைவில் திருமணம் செய்தியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென்று நாங்கள் பிரியப் போகிறோம் என்று குட் பாய் சொல்லி பிரிந்து விட்டார்கள்.

Also read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

Trending News