வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காதலுக்கு மொகரகட்ட முக்கியம் இல்ல என நிரூபித்த 5 ஜோடிகள்.. யாருமே எதிர்பார்க்காத மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி

சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் அழகு பார்க்காமல் மனதை பார்த்து மட்டுமே சில ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பொதுவாக கல்யாணம் என்பது ஜோடி பொருத்தம் பார்த்து தான் செய்வார்கள். ஆனால் மனப்பொருத்தம் மட்டுமே வைத்து கல்யாணம் செய்துகொண்ட 5 பிரபலங்களை பார்க்கலாம்.

தேவயானி ராஜ்குமாரன் : ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தேவயானி. குடும்ப பாங்கான கதை என்றால் முதலில் தேவயானி தான் இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த போதே இயக்குனர் ராஜ்குமாரனை தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read : ரஜினி மகள்களால் நகுல் எடுத்த முடிவு.. இன்று வரை ஒதுங்கி இருக்கும் தேவயானி

சோனியா அகர்வால் செல்வராகவன் : நடிகை சோனியா அகர்வால் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அதன் பின்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

முத்துமலர் பாலா : இயக்குனர் பாலா கரடு முரடான குணமுடையவர் என பலர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் இவர் முத்துமலர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுத்தமாக ஜோடி பொருத்தம் இல்லை என்றாலும் மனப்பொருத்தம் இருந்ததால் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களும் சமீபத்தில் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர்.

Also Read : சோனியா அகர்வாலை கடுமையாக திட்டிய செல்வராகவன்.. சமாதானம் செய்த பிரபலம்

பிரியா அட்லீ : பிரபல இயக்குனர் அட்லீ முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் சின்னத்திரை நடிகையான பிரியாவை அட்லீ திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பிரியா அட்லீ தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாலட்சுமி ரவீந்தர் : பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இது கோலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரகசியமாக இவர்களது திருமணம் நடந்த புகைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

Also Read : 2022ல் திருமணம் செய்த 5 சின்னத்திரை நட்சத்திரங்கள்.. பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி

Trending News