வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.. 17 வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா சாயிஷா

காதலுக்கு மனசு தான் முக்கியம் வேற எதுவும் தேவையில்லை என்ற வசனங்களை நாம் சினிமாவில் அடிக்கடி கேட்டு இருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என சில ஜோடிகள் நிரூபித்து இருக்கின்றனர். அந்த வகையில் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 நட்சத்திரங்களை பற்றி இங்கு காண்போம்.

ஸ்ரீதேவி – போனி கபூர்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்த ஸ்ரீதேவி பாலிவுட் திரையுலகிலும் கொடிகட்டி பறந்தார். கொள்ளை அழகுடன் தேவதை போல் இருந்த இவரை திருமணம் செய்து கொள்ள நடிகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் போட்டி போட்டனர். ஆனால் இவரோ தன்னைவிட எட்டு வயது பெரியவரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே அவர் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: காதலுக்கு மொகரகட்ட முக்கியம் இல்ல என நிரூபித்த 5 ஜோடிகள்.. யாருமே எதிர்பார்க்காத மகாலட்சுமி ரவீந்தர் ஜோடி

சினேகன் – கன்னிகா: தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். எட்டு வருடங்களாக நடிகை கன்னிகாவை காதலித்து வந்த சினேகன் அவரை சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு இடையே 16 வயது வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ராதிகா – குமாரசாமி: தமிழில் இயற்கை என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமான குட்டி ராதிகா ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகையாக இருக்கும் போதே இவர் தன்னைவிட 27 வயது பெரியவரான கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு வயது பெறும் 20 தான். இது பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: காதல் கதையில் கில்லாடியான 5 இயக்குனர்கள்.. மூன்று தலைமுறையாக டிரெண்டை மாற்றிய மணிரத்தினம்

பகத் பாசில் – நஸ்ரியா: தமிழில் துரு துரு கேரக்டர்களில் நடித்து பிரபலமான நஸ்ரியா மிகச்சிறு வயதிலேயே நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 12 வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும் இந்த ஜோடி இப்போது சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆர்யா – சாயிஷா: சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்த ஆர்யா இப்போது ஆக்சன் ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். பல வருடங்களாக திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த இவர் தன்னை விட 17 வயது சிறியவரான சாயிஷா மீது காதலில் விழுந்தார். அதன் விளைவாக சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இப்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

Also read: ஏடாகூடமாக வெளிவந்த 5 கள்ளக்காதல் படங்கள்.. மாமனாருடன் தொடர்பில் இருந்த அமலா பால்

Trending News