வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வில்லனுக்கு ஃபிளாஷ்பேக் வைத்த வெறித்தனமான 5 படங்கள்.. கடவுள் பாதி மிருகம் பாதியாக அலறவிட்ட ஆண்டவர்

Actor Kamal: படத்தில் ஃபிளாஷ் பேக்கில் எதிர்பாராத திருப்புமுனையாய் அமைந்த படங்கள் ஏராளம். அதிலும் ஹீரோக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து தமிழ் சினிமாவில் ஃபிளாஷ் பேக் வைத்திருப்பார்கள்.

அவ்வாறு இல்லாமல் தான் செய்யும் குற்றத்திற்கு ஒரு நியாயம் தேடுவதன் பொருட்டு, வில்லனுங்களுக்கு ஃபிளாஷ்பேக் அமைத்துக் கொடுத்திருப்பார்கள். அது போன்று நெகட்டிவ் ரோல் கொண்ட வில்லன்களுக்கு வெறித்தனமான ஃபிளாஷ் பேக் இடம்பெற்ற 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. இவ்வளவுதானா?

ராட்சசன்: 2018ல் சைக்கோ திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற நடித்திருப்பார்கள். இப்படத்தில் கிறிஸ்டோபராய் இடம் பெறும் நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டிருக்கும். சிறுவயதில் ஏற்படும் காதல் தோல்வியை பொறுக்க முடியாது, மன ரீதியாய் பாதிக்கப்பட்டு அதன் பின் தாயும், மகனும் சேர்ந்து பழிவாங்கும் கதை அம்சம் கொண்டு திகில் நிறைந்ததாய் மக்களின் பேராதவை பெற்று வெற்றி கண்டது. இவை அனைத்தும் படம் இறுதியில் ஃபிளாஷ்பேக் காட்சிகளாக இடம் பெற்றிருக்கும்.

2.0: சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் தான் 2.0. இப்படத்தில் எமி ஜாக்சன், ரஜினி, அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சிட்டிக்கு எதிராய் உருவாகும் பறவை போன்ற அவதாரம் மாஸாய் இடம் பெற்றிருக்கும். அக்கதாபாத்திரத்தை ஏற்கும் அக்ஷய் குமாரின் ஃபிளாஷ் பேக் படத்திற்கு நல்ல கருத்தை வெளிப்படுத்தி இருக்கும். மின்காந்த கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளுக்கு நிகழும் மரணத்தை வெளிப்படுத்தும் காட்சி காண்போர் இடையே உருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

Also Read: பாக்கியா மூடுறா கேட்ட, வேற லெவல் கெத்து.. அசிங்கப்பட்டு நடுத்தெருவுக்கு போன ராதிகா கோபி

விக்ரம் வேதா: அதிரடி திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வேதாளம் கதை சொல்வது போல விஜய் சேதுபதி இப்படத்தில் மூன்று கதையை சொல்லி இது நல்லது, தீமை பற்றிய கருத்துக்களை மாதவனிடம் கேட்கும் கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார். இறுதியில் இப்படத்தில் விஜய் சேதுபதி மேற்கொள்ளும் ஃபிளாஷ்பேக் தன் பக்க நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாய் அமைந்திருக்கும்.

ஆளவந்தான்: ஆக்சன் நிறைந்த திரில்லர் படமாய் வெளிவந்த படத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் இரு மாறுபட்ட வேடத்தில் கமலஹாசன் நடித்திருப்பார். தனக்கு கிடைக்காத அன்பை கொண்டு தனக்குள் இருக்கும் சாத்தான் கூறுவதை கேட்டு கொலை செய்வது போன்று ஃபிளாஷ்பேக்கில் கூறப்பட்டிருக்கும். மேலும் நந்து கதாபாத்திரத்தில் தன் தத்ரூபமான நடிப்பினை வெளிகட்டியிருப்பார் கமல்.

Also Read: ஒரு வழியா முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி .. அட போங்கடா என டேக்கா கொடுத்த த்ரிஷா

ஸ்பைடர்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஸ்பைடர் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, மகேஷ் பாபு, ராகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தின் ஃபிளாஷ்பேக்கில் இடம்பெறும் எஸ் ஜே சூர்யாவின் வித்யாசமான பிரச்சனையால் ஏற்படும் சம்பவங்களை எதிர்கொள்ளும் கதையம்சம் கொண்டு படம் அமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

Trending News