சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

தமிழ் சினிமாவை நம்பி பூஜ்யமான 5 கிரிக்கெட் வீரர்கள்.. தோனி ஆன டக்கவுட்டும், தலை தெரிக்க ஓடிய சீனியரும்

பாலிவுட்டில் ஹிந்தி படங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு தமிழ் மொழியில் தான் கொடி நாட்டுவேன் என கோலிவுட் பக்கம் வந்து ஐந்து கிரிக்கெட் வீரர்கள் மண்ணை கவ்வி தலைதரிக்க ஓடி உள்ளனர். இங்கே பட்ட அடியால் சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அதிலும் சீனியர் வீரர் ஒருவர் ஆரம்பத்திலேயே ஹீரோவாக நடித்து பின் ஒதுங்கி விட்டார்

தோனி ஆன டக்கவுட்

மகேந்திர சிங் தோனி: ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியதால் இவர் மிகவும் ஃபேமஸ். அதனால் சென்னையில் சினிமா படத்தை தயாரித்து ஜெயித்து விடலாம் என தயாரித்த படம் தான் எல் ஜி எம். ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா போன்றவர்கள் நடித்தனர். ஆனால் இந்த படம் தோனிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி தயாரிப்புக்கு தடை போட்டது.

ஹர்பஜன்சிங்: நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ராமராஜன் பாணியில் களமிறங்கினார். அர்ஜுன், லாஸ்லியா மற்றும் இவரின் நடிப்பில் உருவானது “பிரண்ட்ஷிப்” படம். இந்த படம் அட்டர் பிளாப்பாகி ஹர்பஜன்சிப் நடிப்புக்கு எண்டு கார்டு போட்டது.

இர்ஃபான் பதான்: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடித்தார் . படம் மட்டுமில்லை இவர் நடிப்பும் பிளாப்பாகி இப்பொழுது சினிமாவை ஓரம் கட்டி விட்டார். இமைக்கா நொடிகள், டிமான்டி காலனி போன்ற மாஸ்டர் கிளாஸ் படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து பதான் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்.

ஸ்ரீ சாந்த்: இந்திய அணியில் மிகவும் துடிப்பாக செயல்பட்ட வீரர். ஆரம்பத்தில் இவரது கிரிக்கெட் கேரியர் நன்றாக சென்றாலும் அதன் பின் மோசமான பெயர் வாங்கி வெளியே வந்து விட்டார். பின்னர் படத்தில் நடிக்கலாம் என மலையாள சினிமாவை தேர்ந்தெடுத்தார். அது கை கொடுக்காததால் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து மொக்கை வாங்கி சென்று விட்டார்.

தலை தெரிக்க ஓடிய சீனியர்.

சடகோபன் ரமேஷ்: போட்டா போட்டி, சந்தோஷ் சுப்பிரமணியம் என இரண்டு மூன்று படங்களில் நடித்தார். முதல் படமாகிய போட்டா போட்டியில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் படங்கள் கை கொடுக்கவில்லை. கடைசியாக விஷால் நடித்த மதகத ராஜா படத்தில் நடித்துள்ளார் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இப்பொழுது இந்த சீனியர் வீரர் கமெண்டரி பக்கம் சென்று விட்டார்.

- Advertisement -

Trending News