வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாரிசுகளுக்கு போட்டியாக நடிக்கும் 5 அப்பா ஹீரோக்கள்.. இப்பவும் நடிப்பு அரக்கனாக சுற்றிவரும் சீயான்

Vikram – Dhruv Vikram: சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகர்களாக நடித்த நடிகர்கள் குறிப்பிட்ட வயதை தாண்டியதும் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என தங்களுடைய ரூட்டை மாற்றி விடுவார்கள். ஆனால் ஒரு சில ஹீரோக்களுக்கே எவ்வளவு வயதானாலும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் இந்த ஹீரோக்கள் தங்களுடைய மகன்கள் ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே, இவர்களும் ஹீரோக்களாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் – துருவ் விக்ரம்: தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் உச்சத்திற்கு வந்தவர் தான் சீயான் விக்ரம். ஒவ்வொரு படத்திலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை காட்டி வருவது தான் விக்ரமின் தனித்துவம். இவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இப்பொழுது அப்பாவும் மகனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:தனி ஒருவன் 2க்கு வில்லனாக பாலிவுட் ஜாம்பவான்.. சஞ்சய் தத், ஜாக்கி செராப் வரிசையில் வரும் கமல் ஜெராக்ஸ்

மம்முட்டி – துல்கர் சல்மான்: நடிகர் மம்முட்டிக்கு தென்னிந்திய சினிமாவில் பெண் ரசிகைகள் அதிகம். அதே போல் தான் அவருடைய மகன் துல்கர் சல்மானுக்கு இப்போது பெண் ரசிகைகள் அதிகமாக இருக்கிறார்கள். துல்கர் சல்மான் ஒரு பக்கம் ஹிட் மேல் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மம்முட்டியும் தன்னுடைய சிறந்த நடிப்பில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவி – ராம்சரண்: தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கு மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்ற இவர், மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் பொழுது அவருடைய மகன் ராம்சரண் தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருந்தார். தற்போது அப்பா மகன் இருவருமே போட்டி போட்டுக் கொண்ட நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

நாகர்ஜுனா – நாகசைதன்யா: தென்னிந்திய சினிமா உலகில் என்றும் பதினாறு போல், எப்போதுமே இளமையாக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருக்கு அந்த காலகட்டத்தில் பெண் ரசிகைகள் ரொம்பவே அதிகம். இவருடைய மகன் நாக சைதன்யா தற்போது தெலுங்கு சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் நாகார்ஜுனாவும் ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் மட்டும் இல்லாது சத்யராஜ் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருடைய மகன் சிபிராஜ் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவரும் ஹீரோவாக நடித்தார். அதேபோல் நடிகர் சிம்பு ஒரு பக்கம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருடைய அப்பா விஜய டி ராஜேந்தர் வீராசாமி படத்தில் ஹீரோவாக நடித்து, அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வரிசையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சீவ், தனுஷின் மகன், அஜித்தின் மகன் போன்றோர் கதாநாயகர்களாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read:சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்

Trending News