திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

Directed and Acted as a Hero: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இயக்குனர்கள் என்று குவிந்து இருந்தாலும், ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தானே படத்தை இயக்கி அதில் நடிக்கும் திறமையை வளர்த்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்கள் இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதன்: இவர் முதலில் இயக்குனராக கோமாளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து விட்டார். அந்த படம் அதிக வரவேற்பு அடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான கதையை ரெடி பண்ணிவிட்டு அதற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் படலத்தில் இறங்கினார். அப்பொழுது இவர் எதிர்பார்க்கும் நடிப்பு மற்றவர்களிடமிருந்து வர வைப்பதற்கு பதிலாக ஏன் நாமே நடித்து விடக்கூடாது, என்ற எண்ணத்தில் தான் லவ் டுடே படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் இவருடைய எதார்த்தமான நடிப்புக்கே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி நடித்து வருகிறார்.

சுந்தர் சி: இவர் இயக்குனராக பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றியான இயக்குனர் என்று மகுடம் சூடிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த பின்பு ஹீரோவாகலாம் என்ற ஆசை வந்துவிட்டது. அதற்காக மற்ற இயக்குனர்களை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஒரு த்ரில்லர் படத்துடன் ஹீரோவாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து இவரே இயக்கிய அரண்மனை 1, 2, 3 படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது அரண்மனை 4 படத்தையும் இயக்கி நடித்துக் கொண்டு வருகிறார்.

Also read: டாப் கீரில் செல்லும் பிரதீப் ரங்கநாதன்.. ஜெட் வேகத்தில் உயர்த்திய சம்பளம்

ஹிப் ஹாப் தமிழா: இவர் சினிமாவிற்கு ஒன்று இரண்டு படங்களில் பாடி இசையமைத்துக் கொடுத்து அறிமுகமானார். அதன் பின் ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசை இருந்ததால் இவரே இயக்கி நடித்த முதல் படம் மீசைய முறுக்கு. இப்படம் இவருடைய எதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் விதமாகத்தான் எடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து சிவக்குமாரின் சபதம் என்ற படத்தையும் இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

லாரன்ஸ்: இவர் முதல் முதலில் டான்ஸ் மாஸ்டராக சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். அதன் பின் முக்கியமான கதாபாத்திரத்தில் மற்றும் இயக்குனராகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் ஹீரோவாக இருந்தால் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையில் விடாமுயற்சியுடன் போராடி வந்தார். அப்பொழுது இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்ல ஒரு கதாபாத்திரம் கிடைக்காததால் இவரை படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி தமிழில் வெளிவந்த படம் தான் முனி, டான், காஞ்சனா 1,2,மற்றும் 3. அதன் பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படம் எடுப்பதை தவிர்த்து விட்டு முழு நேரமும் இவர் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Also read: சிம்புவால் நாசமா போன படம்.. வெற்றி இயக்குனரின் கேரியரையே காலி செய்த சம்பவம்

விஜய் ஆண்டனி: இவர் இசையமைப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி நான் என்ற படத்தின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானார். அதனை தொடர்ந்து சலீம், இந்தியா, பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் என்ற பல படங்களில் ஹீரோவாக இவருடைய நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். பிறகு ஏன் நம்மளே ஒரு இயக்குனராக கூடாது என்று யோசித்து இயக்கிய படம் தான் பிச்சைக்காரன் 2. இப்படத்தில் இவரை ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

சிம்பு: இவரிடம் இல்லாத திறமையை இல்லை என்று சொல்லும் அளவிற்கு பன்முகத் திறமையை கொண்ட நடிகர். ஹீரோவாக எந்த அளவிற்கு மக்களுக்கு இவரை பிடிக்குமோ அதே மாதிரி இயக்குனராகவும் தன்னுடைய முத்திரை பதிக்க வேண்டும் என்று இயக்கிய படம் தான் மன்மதன் மற்றும் வல்லவன். இந்த இரண்டு படங்களிலும் இவரே ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

கமல்ஹாசன்: உலக நாயகன் என்று சொல்வதற்கு ஏற்ப அனைத்து வித்தைகளையும் தெரிந்து வைத்து சினிமாவில் வலம் வருகிறார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணி பாடகர், இயக்குனர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக வேலைகளை செய்யக்கூடிய கெட்டிக்காரர். அப்படி இவர் இயக்கிய படங்கள் ஆன ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1 மற்றும் 2. இந்த படங்களை இவரே இயக்கி இதில் ஹீரோவாகவும் நடித்து சாதனை படைத்திருக்கிறார்.

Also read: தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

Trending News