ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சரக்கு தீர்ந்ததால் காணாமல் போகும் 5 இயக்குனர்கள்.. அந்தஸ்தை இலக்கும் ஆபத்தான நிலைமை

முதலிரண்டு படங்களை ஹிட்டாக கொடுத்து விட்டு அடுத்தடுத்து மொக்கை படங்களை கொடுக்கும் இயக்குனர்களை பற்றி பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் ஆனாலும் கதை தேர்வில் சொதப்பிய ஹீரோக்கள் போல சரக்கு தீர்ந்ததால் காணாமல் போன இயக்குனர்கள் அதிகமாக உள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ்: பிஸ்ஸா, ஜிகர்தண்டா போன்ற சூப்பர் படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து பேட்ட படத்தை கொடுத்தார். அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் மொக்கை வாங்கியது. குறிப்பாக இறைவி, ஜகமே தந்திரம் போன்ற படங்கள் இவரை முன்னணி இயக்குனர் அந்தஸ்தில் இருந்து கீழே இறக்கியது.

Also Read: நாளைய இயக்குனர்கள் மூலம் வளர்ந்த 5 பெரிய இயக்குனர்கள்.. முதல் படத்திலேயே மிரட்டி விட்ட கார்த்திக் சுப்புராஜ்

ராம்: கற்றது தமிழ் படம் மூலம் அனைவரின் கவனத்தை பெற்றவர் இயக்குனர் ராம். தங்கமீன்கள் படத்தை சிறப்பாக இயக்கியதுடன் நடிக்கவும் செய்தார். அதன் பிறகு இவர் இயக்கிய தரமணி, பேரன்பு போன்ற படங்கள் நல்ல விமர்சனம் பெற்ற போதும் நல்ல வெற்றியை பெறவில்லை. மேலும் ஆரம்பத்தில் இருந்த இயக்கும் திறமை தற்போது இருப்பது போன்ற டச் தற்போது இல்லை

சுசீந்திரன்: வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்த சுசீந்தரனின் அடுத்தடுத்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. சிலப்படங்களை பார்த்தால் இவர் தான் இயக்கினாரா என்ற சந்தேகமே வந்துவிடும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

Also Read: 4 படங்களை ஒரே நேரத்தில் இயக்கும் சுசீந்திரன்.. அறுக்கத் தெரியாதவருக்கு 58 அருவாள் கதைதான்!

அமீர் : பருத்திவீரன் என்ற தேசிய அளவில் விருது பெற்ற படத்தை இயக்கிய அமீர், ஜெயம் ரவியை வைத்து ஆதி பகவன் படத்தை இயக்கினார். மிகப்பெரும் தோல்வியை அந்த படம் தழுவியது. அதன் பிறகு இரண்டு படங்களை அறிவித்துவிட்டு இயக்காமல் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

வசந்தபாலன்: அங்காடி தெரு, வெயில் படங்கள் மூலம் நம் மனதுக்கு நெருக்கமாக ஆன இயக்குனர் வசந்தபாலன். அதன் பின்னர் இவர் இயக்கிய பல படங்கள் மொக்கை வாங்கியது. அதிலும் பெரும் பொருட்செலவில் இவர் இயக்கிய காவியத்தலைவன் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த லிஸ்ட் போக சுந்தர் சி, செல்வராகவன், ஆர்.கண்ணன், சிறுத்தை சிவா போன்றவர்களையும் இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

Also Read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்

Trending News