வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினேகாவையே கவர்ச்சி காட்ட வைத்த 5 இயக்குனர்கள்.. செல்வராகவன் கொடுத்த மோசமான கதாபாத்திரம்

பெரும்பாலும் சினிமாவில் ஹோம்லி கேரக்டரில் நடித்து டாப் நடிகை லிஸ்டில் இடம் பெற்ற சினேகா ரசிகர்களால் புன்னகை அரசி என்று கொண்டாடப்பட்டவர். ஆனால் இவர் மீது என்ன கோபமோ தெரியவில்லை, 5 இயக்குனர்கள் நல்லது செய்கிறேன் என்ற பெயரில் கவர்ச்சியாக காட்டி அவருடைய மார்க்கெட்டை சரித்து விட்டனர்.

நான் அவன் இல்லை: செல்வா இயக்கத்தில் ஜீவன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, தேஜாஸ்ரீ இவர்களுடன் சினேகாவும் கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்தில் பல பெண்களை நம்ப வைத்து ஏமாற்றும் ஜீவன் மீது சினேகா காதல் கொள்வது தான் கேவலத்தின் உச்சம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு எப்படி சினேகா ஒத்துக்கொண்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு வெளியான சினேகாவின் படங்கள் அனைத்தும் அவரை மிகவும் கண்ணியமான கதாநாயகியாகவே காட்டினார். ஆனால் இந்த படத்தில் நான்கு ஐந்து பெண்களை காதலித்து ஏமாற்றிய குற்றவாளியை சினேகா உருக உருக காதலிப்பது போல் காட்டி அவருடைய மார்க்கெட்டை சரித்து விட்டார்.

புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் அதிரடி ரவுடிசம் கதைகளை கொண்ட படம் புதுப்பேட்டை.இந்தப் படத்தில் சினேகாவிற்கு செல்வராகவன் படுமோசமான கதாபாத்திரத்தை கொடுத்து அவருடைய மார்க்கெட்டை சரித்தது மட்டுமல்லாமல் குடும்ப குத்து விளக்காக இருந்த புன்னகை அரசியை டார்ச்லைட் ஆக மாற்றிவிட்டார். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் ஒரு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. அதேசமயம் கதாநாயகியாக பல படங்களில் ஹோம்லி கேரக்டரில் நடித்த சினேகா, இதில் விலைமாதுவாக மாறி ரசிகர்களை திணறடித்தார்.

Also Read: விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா.. கணவருடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

பாண்டி: ராசு மதுரவன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் குடும்ப திரைப்படமாக வெளியான பாண்டி படத்தில் புவனா என்ற கேரக்டரில் புல்லரிக்க வைக்கும் அளவுக்கு சினேகா கவர்ச்சி தூக்கலாக நடித்திருப்பார். பாவாடை தாவணியில் எவ்வளவு கிளாமர் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டி இருப்பார். அதிலும் தோழியின் திருமணத்தில் குடித்துவிட்டு ‘குத்து மதிப்பா’ என்ற பாடலில் செம குத்தாட்டம் போட்டு இளசுகளை திணறடித்தார்.

கோவா: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தில் பல கதாநாயகிகளில் ஒருவராக சினேகாவும் நடித்திருப்பார். இதில் வைபவ் உடன் சினேகா செய்த அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. கடற்கரை மணலில் உருண்டு புரளும் காட்சி எல்லாம் கண் கூசும் வகையில் இருக்கும். கிளாமர் தூக்கலான உடையில் இந்த படத்தில் சினேகா கவர்ச்சி நடிகையாகவே வலம் வந்து அவருடைய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

Also Read: சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

வசீகரா: செல்வ பாரதி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக வசீகரா என்ற படத்தில் சினேகா நடித்திருப்பார். இந்த படத்தில் ஏற்கனவே நிச்சயமாகி திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணான சினேகா, வீட்டிற்கு கல்யாணத்திற்காக உதவி செய்ய வந்த விஜய்யை காதலித்து அற்பத்தனமாக அவர் மீது ஆசைப்படுவார். அப்போது இவர்களுக்கிடையே நடக்கும் காதல் லீலை பார்ப்பதற்கு கண் கூசும் வகையில் இருக்கும். எப்போதுமே காதலன் தான் காதலி பின்னாடி துரத்தி துரத்தி காதலிப்பார். ஆனால் இந்த படத்தில் சினேகா விஜய்யைதுரத்தி துரத்தி காதலித்தது அவர் மீது இருந்த இமேஜை குறைத்து விட்டது.

இவ்வாறு இந்த ஐந்து இயக்குனர்கள் தான் தங்களுடைய படங்களில் சினேகாவை கவர்ச்சி புயலாக காட்டி அவருடைய மார்க்கெட் சரிவதற்கு காரணமாக அமைந்தனர். அது மட்டுமல்ல செல்வராகவன் ஒரு படி மேலே சென்று விலை மாதுவாக அவரை காட்டியதுதான் ரொம்ப மோசம்.

Also Read: போலீஸ் கேரக்டரில் அரளவிட்ட 5 கதாநாயகிகள்.. கேப்டனே கூப்பிட்டு பாராட்டிய நடிகை

Trending News