வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் டாட்டா காமித்து கழட்டிவிட்ட 5 இயக்குனர்கள்.. வாரிசுக்கு பின் ஒரு பயம் இருக்குமா இல்லையா

விஜய் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்றுதான். அவ்வாறு இருக்கையில் நல்ல கதை உள்ள படங்களை இயக்குவது இயக்குனர் கையில் இருக்கிறது. மேலும் தொடர்ந்து சமீப காலமாக இவரின் படங்கள் தோல்வியை சந்தித்து வருவது மனவேதனையை உண்டாக்குகின்றது.

இத்தகைய காரணத்தால் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து படங்களை நடித்து வருகிறார் விஜய். மேலும் நல்ல இயக்குனர்களோடு, நல்ல கதை கொண்ட படத்தில் நடிக்க ஆர்வம் செலுத்தி வரும் இவர் தற்போது சில இயக்குனர்களுக்கு டாட்டா காண்பித்து வருகிறார். அப்படி ஓரம் கட்டப்பட்ட 5 இயக்குனர் பற்றி இங்கு காண்போம்.

Also Read: விஜய் போட்ட தெளிவான ஸ்கெட்ச்.. லியோ, தளபதி 68 படங்களுக்கு சொன்ன குட் நியூஸ்

கோபிச்சந்த்: தெலுங்கில் கேமரா அசிஸ்டெண்டாக சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் கோபிசந்த். இதைத்தொடர்ந்து இவர் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் இயக்கியபடங்களில் டான் சீனு மற்றும் பளுபு மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுத் தந்தது. அதை தொடர்ந்து இவர் விஜய்யை கொண்டு தமிழில் படம் இயக்க ஆசைப்பட்டதாகவும் அதை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

அட்லி: இவர் விஜய்யின் நடிப்பில் இயக்கிய படங்கள் தான் தெறி, மெர்சல்,பிகில். ஆனால் இப்படங்களில் கதை பெருதளவு பேசப்பட்டாலும் போதிய வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நான்கு வருடம் கழித்து மேலும் விஜய் வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு இருக்கிறார் அட்லி. ஆனால் இவர் சம்பளம் அதிகம் கேட்பதால் தயாரிப்பாளர் தரப்பில்
வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இருப்பினும் இவர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தளபதி 68 கூட்டணி உருவானது இப்படிதான்.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சீக்ரெட் ஆக லாக் செய்த ஏஜிஎஸ்

பாபி கோலி: தெலுங்கு இயக்குனர் ஆன இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அண்மையில் வெளிவந்த வால்டர் வீரய்யா என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து தமிழில் விஜய்யின் நடிப்பில் படம் எடுக்க ஆர்வம் காட்டியதற்கு விஜய் தன் கால்ஷீட் கொடுக்காமல் டாட்டா காட்டியதாக கூறப்படுகிறது.

ஹச் வினோத்: இவர் பெரும்பாலும் அஜித்தை வைத்து படம் தயாரித்து வெற்றி கண்டு இருக்கிறார். இவரின் படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் விஜய் லோகேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லியோ படத்தை மேற்கொண்டதால் அவை கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read: எங்க 100-வது படம் நீங்கதான்.. விஜய் கால் சீட் கொடுத்தும் கண்டுக்காத பிரம்மாண்ட நிறுவனம்

வம்சி: இவர் தெலுங்கு பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரின் படங்களான முன்னா, பிருந்தாவனம், ஓபிரி நல்ல விமர்சனங்களை பெற்று அதிக வசூலை பெற்று தந்தது. தெலுங்கில் சில படங்களே இயக்கிய இவர் இந்த ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தை இயக்கினார். இப்படத்தின் கதை பெருதளவு பேசப்படவில்லை. மேலும் தெலுங்கு பட சாயலில் படத்தை எடுத்து ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னரே அக்கடதேச இயக்குனர்களை அறவே ஒதுக்க ஆரம்பித்து விட்டார் விஜய்.

Trending News