புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த 5 இளம் இயக்குனர்கள்.. இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன அவலம்

சினிமாவை பொறுத்த வரையிலும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர்கள் நீண்ட காலம் ஆக போராடி வருவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விடும். இந்த வெற்றியை இயக்குனர்களில் ஒரு சிலரே கிடைத்த வெற்றியை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து ஜெயிக்கிறார்கள். ஒரு சிலரோ முதல் வெற்றிக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.

உறியடி-விஜயகுமார்: கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் ரிலீசான திரைப்படம் உரியடி. இதில் இவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். சாதி அரசியலை ரொம்பவும் வெளிப்படையாக எடுத்து சொல்லி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு இவர் எந்த ஒரு வெற்றி படமும் கொடுக்கவில்லை. சூர்யாவின் சூரரைப் போற்றும் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினார்.

Also Read: உறியடி இயக்குனரின் அடுத்த சம்பவம் செய்யும் படம்.. ஆனா அதுல ஒரே ஒரு குறை இருக்கு

திரௌபதி-மோகன்: நடிகர் ரிச்சர்ட் மற்றும் ஷீலா ஆகியோரை வைத்து திரௌபதி என்னும் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் மோகன். ஜி. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமானது. அதன்பின்னர் இவர் இயக்கிய ருத்ர தாண்டவம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. இப்போது இவரைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.

மாயா-அஸ்வின்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தனி கதாநாயகியாக மாயா படத்தில் இயக்கியவர் தான் இயக்குனர் அஸ்வின். திகில் திரைப்படமான இந்த மாயா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இப்படி ஒரு வெற்றி படத்தை கொடுத்த அஸ்வின் அதன் பின்னர் எட்டு வருடங்களுக்கு பின்னர் தன்னுடைய அடுத்த படமான கனெக்ட்டை இயக்கியிருக்கிறார். இந்த படம் அவரின் முந்தைய படம் போல் வெற்றி பெறவில்லை.

Also Read: மாயா பட எதிர்பார்ப்பை நயன்தாராவின் கனெக்ட் பூர்த்தி செய்ததா.? பயமுறுத்தும் ட்விட்டர் விமர்சனம்

துருவங்கள் பதினாறு-கார்த்திக் நரேன்: இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் துருவங்கள் பதினாறு. இந்த படத்தில் நடிகர் ரகுமானை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் புது முகங்கள் தான் புது முகங்கள் தான். இந்த புதுமுகங்களை வைத்து கார்த்திக் நரேன் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

ராட்சசன்-ராம்குமார்: இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு மற்றும் அமலா பால் நடித்திருந்தனர். அடுத்தடுத்து விறுவிறுப்பை கூட்டம் திகில் திரைப்படமாக அமைந்ததால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியின் காரணமாக இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படி ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனருக்கு அதன் பிறகு வேறு எந்த படமும் அமையவில்லை.

Also Read: டாப் 10 சிறந்த சைக்கோ திரில்லர் படங்கள்.. வசூல் மழையால் செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ராட்சசன்

Trending News