ஹீரோக்களால் அலைக்கழிக்கப்பட்ட 5 இயக்குனர்கள்.. வெங்கட் பிரபுவை முழு கண்ட்ரோலில் தூக்கிய தளபதி

Thalapthy 68: இன்றைய இளம் இயக்குனர்களுக்கு எப்படியாவது முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து விட வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் அது போன்ற வாய்ப்புகள் கிடைப்பதற்குள் அவர்களே முட்டி மோதி ஓய்ந்து விடுவார்கள். சில நேரங்களில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக கடைசிவரை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்த இயக்குனர்களும் உண்டு. அதிலும் இந்த ஐந்து இயக்குனர்கள் ஒரு டாப் ஹீரோவை வைத்து படம் பண்ணுவதற்குள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

சிபி சக்கரவர்த்தி: நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை நேரில் கூப்பிட்டு பாராட்டியதோடு இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் கடைசியில் சிபி நிலைமை ‘இலவு காத்த கிளி’ போல் ஆனது. ரஜினியும் இவருக்கு டாட்டா காட்டிவிட்டு இப்போது லோகேஷ் கனகராஜ் படத்திற்காக ரெடியாகி கொண்டிருக்கிறார்.

Also Read:ஒரு வருஷம் சம்பவம் செய்யப் போகும் விஜய்.. லியோவை மிஞ்சிய தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

விக்னேஷ் சிவன்: காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் விக்கி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவ்வாறு அஜித் படத்திலிருந்து விலக்கப்பட்ட பின்பு அடுத்து இவர் என்ன செய்யப் போகிறார் என்று எந்தவித அப்டேட்டுகளும் இல்லாமல் இருக்கிறது.

லிங்குசாமி: அதிரடி ஆக்சன் திரைப்படங்களுக்கு பேர் போனவர் இயக்குனர் லிங்குசாமி. இவருடைய இயக்கத்தில் ரன் மற்றும் சண்டைக்கோழி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வரும் இவரின் படத்தில் நடிப்பது என்றால் ஒவ்வொரு ஹீரோக்களும் தெறித்து ஓடுகிறார்கள்.

Also Read:கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

வெங்கட் பிரபு: இயக்குனர் வெங்கட் பிரபு வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து சென்னை 28, சரோஜா போன்ற படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றவர். இவருக்கு மாநாடு திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தற்போது தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த பின், நடிகர் விஜய் வெங்கட் பிரபுவை மொத்தமாக தன் கண்ட்ரோலில் கொண்டு வந்து விட்டார். அவரை மீறி தற்போது இவர் எதுவுமே பேச முடியாத நிலையில் இருக்கிறார்.

ஹரி: ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த முன்னணி இயக்குனர் தான் ஹரி. சாமி, கோவில், சிங்கம் போன்று மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது பிளாப் படங்கள் தான் கொடுத்து வருகிறார். எப்படியாவது ஒரு வெற்றி படம் கொடுத்து விட வேண்டும் என்று நடிகர் சூர்யாவிடம் அருவா படத்தின் கதையை சொன்னார் ஹரி. ஆனால் சூர்யா இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் ஹரியை டீலில் விட்டு வருகிறார்.

Also Read:விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

- Advertisement -