புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினி படம் என நம்பி ஏமாந்த 5 இயக்குனர்கள்.. அவங்க சம்பளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திய படங்கள்

Rajini Movie Directors: ரஜினியின் படம் ஒன்னு கிடைச்சா போதும், எப்படியாவது டாப் இயக்குனர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் முதல் மூத்த டைரக்டர்ஸ் வரை சூப்பர் ஸ்டாரின் பட வாய்ப்புக்காக ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் ரஜினி படம் என்று நம்பி இயக்கிய ஐந்து படங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.

எஸ்பி முத்துராமன்: IPS அதிகாரியாக ரஜினி மிரட்டி விட்ட பாண்டியன் படம், எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இதில் அண்ணியின் மரணத்திற்கு பழிவாங்க நினைக்கும் பாண்டியனை சுற்றியே படத்தின் கதை இருந்தது. இதில் பாண்டியன் ஒரு ரகசிய ஆப்ரேஷன் செய்யும் கும்பலை கண்டுபிடித்து, சட்டத்திற்கு எதிராக அவர்களை நிறுத்தி தண்டனை வாங்க வைக்கிறார். எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்த படம் வழக்கமான கதைக்களத்தை கொண்டதால், 1992ல் தீபாவளியை முன்னிட்டு ஆரவாரத்துடன் ரிலீஸ் செய்யப்பட்டாலும், கலவையான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.

கே நடராஜ்: கே நடராஜ் இயக்கத்தில் திலீப், பிரியா ராமன் முக்கிய கேரக்டரில் நடித்த வள்ளி படத்தில் ரஜினி, வள்ளியப்பன் வீரய்யாவாக கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த கேரக்டர் அவருக்கு சுத்தமாகவே செட்டாகவில்லை. இந்த படத்தின் கதையை ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சேர்ந்து எழுதி தயாரித்தார். இதுவரை வந்த தமிழ் சினிமாவில் பெண்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் கிளைமாக்ஸ்-இல் திரும்பி திருமணம் செய்து கொள்வார்கள்.

ஆனால் இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக தனது வாழ்க்கையை அழித்தவனை கதாநாயகி தன்னுடைய கையாலே கொலை செய்துவிட்டு, அதற்காக ஜெயிலுக்குப் போகிறார். வித்யாசமான போராட்டத்தை காட்டிய வள்ளி படத்தை, சூப்பர் ஸ்டாரின் படமாக பார்க்க வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் நடராஜ் வேறு எந்த படங்களையும் இயக்காமல் நடிகராகிவிட்டார். 

சுரேஷ் கிருஷ்ணா: கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாபா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. படையப்பா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த பின்பு வெளியான பாபா படத்தில் ஆன்மீகம், அரசியல் கலவையில் உருவாகி ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது. இதுதான் அந்தப் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்தது. இந்த படத்தில் பாபாவிடம் இருந்து கிடைத்த 7 மந்திரங்கள் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதைக் காட்டினர்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தது எதுவுமே இல்லாததால், வசூலில் மண்ணைக் கவ்வியது. ஆனால் இந்த படத்தால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் நஷ்டமடைய கூடாது என ரஜினியை தாமாக முன்வந்து நஷ்ட ஈடு கொடுத்தார்.

Also Read: இப்ப வர ரஜினி தலையை உருட்டிய முக்கியமான 6 பிரச்சனைகள்.. சைக்கோவாக திரிந்த காலங்கள்

5 இயக்குனர்களுக்கு தோல்வியாக அமைந்த ரஜினியின் படங்கள்

ஏஆர் முருகதாஸ்: தர்பார் படத்தில் இருந்த ஒரே நல்ல விஷயம் ரஜினி- நயன்தாரா ஜோடி சேர்ந்தது தான். அதை தவிர இந்த படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ரஜினியின் படம் என இந்த படத்தை பார்க்க வந்தவர்களுக்கு தர்பார் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

மும்பை நகரத்தின் சமூக விரோத அழுக்குகளை கழுவி சுத்தம் செய்ய அனுப்பப்பட்ட ஒரு போலீஸ் ஆபீசரின் அதிரடியும், அதனால் அவர் சந்திக்கும் இழப்புகள் பழிவாங்குதல் போன்றவை தான் இந்த படத்தின் கதை. இதில் ஏஆர் முருகதாஸ் ரஜினியை திரையில் ஜொலிக்க விடுவதில் காட்டிய அதே மெனக்கடலை, லாஜிக் விஷயத்திலும் கொஞ்சம் காட்டி இருந்தால் தர்பார் இன்னும் பெரிய மேஜிக்காக இருந்திருக்கும்.

சிறுத்தை சிவா: ரஜினி, கீர்த்தி சுரேஷ் அண்ணன்- தங்கையாக நடித்த குடும்ப செண்டிமெண்ட் படம் தான் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினாலும் இது ரஜினிக்கான கதை கிடையாது. சூப்பர் ஸ்டார் ரசிகர்களை பொறுத்தவரை மாஸ் நடிகராகவே அவரை பார்க்க விரும்புகின்றனர். ஆனால் அண்ணாத்த படத்தில் குடும்ப செண்டிமெண்டில் ரஜினியை லாக் செய்து விட்டார். இதனால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இப்போது தலைவர் 170 படத்தை மறுபடியும் இயக்குகிறது.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாரான லால் சலாம் படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது 170 மற்றும் லால் சலாம் படத்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளத்தை அண்ணாத்த படத்தை மனதில் வைத்துக்கொண்டு அதிரடியாக குறைத்து விட்டார். இந்த இரண்டு படங்களுக்கும் மொத்தமாக 105 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி இருக்கிறார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் 110 கோடி வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினியின் 10 ஹேர் ஸ்டைலை உருவாக்கிய விஜய்யின் தம்பி.. இப்ப வரை பெருமை பேசும் தருணம்

Trending News