வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அழகில் மயங்கி நடிகைகளை கல்யாணம் செய்த 5 இயக்குனர்கள்.. கில்லாடி வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

5 directors  married actresses: தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. ஆனால் அழகான ஹீரோயின்களை கரெக்ட் பண்ணி திருமணம் செய்து கொண்ட 5 இயக்குனர்களை பற்றி பார்ப்போம். அதிலும் காதல் தோல்வியில் இருந்த நயன்தாராவை இயக்குனர் விக்னேஷ் சிவன் கில்லாடியாக தன்னுடைய காதலில் விழ வைத்துள்ளார்.

மணிரத்தினம்- சுகாசினி: 90களில் இருந்து இப்போது வரை காதலை குறித்த உன்னதமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்தான் இயக்குனர் மணிரத்தினம். இவர் நடிகை சுகாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுகாசினியும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ‘மணிரத்தினத்தின் படத்தில் இருக்கும் கதாநாயகிகள் எந்த அளவிற்கு சந்தோசமாக இருக்கிறார்களோ, அதைவிட பல மடங்கு அவருடைய நிரந்தரமான கதாநாயகியான நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தங்களது இல்லற வாழ்க்கையை குறித்து சந்தோசமாக தெரிவித்தார்.

Also Read: தொடர்ந்து பிளாப் கொடுக்கும் நயன்தாரா.. புருஷனே கைவிட்ட பரிதாபம்

ராஜகுமாரன்- தேவயானி: 90களில் இளசுகளின் மனதைக் கவர்ந்த ஹோம்லி நடிகை தான் தேவயானி. அவ்வளவு அழகாக இருக்கும் தேவயானி பொருத்தமே இல்லாத இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான் இயக்கிய முதல் படமான ‘நீ வருவாய் என’ படம் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியாக அவர் எடுத்த விண்ணுக்கும் மண்ணுக்கும். காதலுடன், சிவராம், திருமதி தமிழ் போன்ற படங்கள் எல்லாவற்றிற்கும் தேவயானியை தான் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

அப்படி தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுத்தே தேவயானியை மயக்கி அவரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இப்போது வரை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Also Read: விக்னேஷ் சிவனால் பறிபோன நிம்மதி.. நயன்தாராவை சுற்றும் சொத்து பிரச்சனை

ஏஎல் விஜய்- அமலாபால்: தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் நடித்த அமலா பாலுக்கும் அந்த படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. அந்த படம் முடிவதற்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை சில மாதங்களே நீடித்தது. கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

அட்லி- பிரியா: கோலிவுட்டில் விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அட்லி, இப்போது பாலிவுட்டிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருகருவென இருக்கும் அட்லிக்கு வெள்ளை வெளேர்னு இருக்கும் பிரியா கிடைத்தது லக்கு தான் என இளசுகள் இவர்களது திருமணத்தின் போது கமெண்ட் செய்தனர்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா: நானும் ரவுடிதான் என்ற ஒரே ஒரு படத்தை எடுத்து நயன்தாராவையே கரெக்ட் பண்ணி திருமணம் செய்து கொண்டவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்களுக்கு இப்போது வாடகைத்தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தன்னுடைய சினிமா கேரியரில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பக்கா பிளான் போட்டு செயல்படுத்துகிறார்.

Also Read: புருஷனை நம்பி பிரயோஜனமில்ல.. குடும்பத்தை மறந்து பிசியான நயன்தாரா, இவ்ளோ படங்களா?

Trending News