வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்காக அடுத்த படம் பண்ண போகும் 5 டைரக்டர்ஸ்.. பிடிக்கவில்லை என்றாலும் விடாமல் துரத்தும் வேதாளம்!

5 directors who are going to make Actor Vijay’s next film: தமிழ் சினிமாவில் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் நடிகர்கள் கூட டான்ஸ் என்று வந்தால் காய்ச்சல் வந்து விடும் அளவுக்கு நடுங்குவார்களாம். “கண்ணா கூடவே பிறந்தது” என்பது போல நடிப்பு,ஆட்டம்,பாட்டம், ஆக்சன் என அனைத்திலும் தலைவர் கிங்டா என்று ரசிகர்களை கொண்டாட வைத்தவர் தளபதி விஜய் மட்டுமே.

இயக்குனர் எஸ் ஏ சி யின் மகன் என்று சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டாலும் தனக்குரிய தனி திறமையின் மூலம் கடகடவென முன்னேறி தமிழ் சினிமாவின் அதிக ரசிகர் பட்டாளத்தோடு முன்னணி நடிகராக கோலோச்சி இருக்கும் விஜய் தொட்டதெல்லாம் பொன். அவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க தவறியதில்லை.

அட்லியுடன் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த விஜய்யின் படங்கள் அனைத்தும் 100, 200 ஆரம்பித்து 600 கோடி வரை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு மற்றும் லியோ இரண்டுமே வசூலில் சக்கை போடு போட்டதுடன் யாரும் நெருங்க முடியாத அளவு தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக வளர்ந்து உள்ளார் விஜய்.

Also read: விஜய் அரசியலுக்கு வந்ததால் பொறாமையில் பொங்கி எழும் 5 பிரபலங்கள்.. மறைமுகமாக எதிர்க்கும் பெரும்புள்ளிகள்

விஜய் என்கிற பெயருக்காகவே படங்கள் வசூலை வாரி குவிக்கின்றன. தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக GOAT படத்தில் நடித்து வருகிறார் விஜய். பல முன்னணி  நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூன் மாதம் பக்ரீத்துக்கு ரிலீஸ் ஆகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான லியோ ஹிட் ஆனதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் லியோ 2 விற்கு ஓகே சொல்லி உள்ளார் தளபதி. கைதி 2 மற்றும் சூப்பர் ஸ்டாருடன் தலைவர் 171 முடித்த கையோடு லியோ 2 தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து ஹிட் கொடுத்த பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்யுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டு உள்ளார். ஏற்கனவே தளபதியை அணுகி கதை சொல்லி வந்த அவர், அந்த கதை விஜய்க்கு திருப்தி தராததால் இவருக்காகவே தரமான மாஸ் கதை ரெடி பண்ணி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.  கதை பிடிக்கும் வரை விஜய்யை விடமாட்டார் போல.

மேலும் விஜய், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ஹச் வினோத்,  சிறுத்தை சிவா என பலரிடமும் அடுத்தடுத்து கதை கேட்டு வருவதாகவும்  பிடிக்கும் பச்சத்தில் கால் சீட் கொடுக்க ரெடியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் கால் நூற்றாண்டுக்கு தமிழ் சினிமாவில் விஜய்யின் ராஜாங்கம் உறுதியாகி உள்ளது.

Also read: இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு

Trending News