திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஹீரோக்களை தாண்டி ஓவர் ஹேண்ட்சமாக இருக்கும் 5 இயக்குனர்கள்.. ஜெயம் ரவி சண்டை போட்டும் மசியத உடன்பிறப்பு

5 directors who are more handsome than heroes: சினிமாவை பொருத்தவரை அழகு எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி திறமையும் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று பலரும் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் சிலரை பார்க்கும் பொழுது ஹேன்சமாக இருக்கிறாரே, ஹீரோவை விட சூப்பரா இருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும். அந்த மாதிரி சில ஐந்து இயக்குனர்கள் ஹீரோக்களை தாண்டி ஓவர் ஹேண்ட்சம் லுக்குடன் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

ராஜமவுலி: தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ராஜமவுலி. இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்று விடுகிறது. அப்படி இவர் எடுத்து அனைத்து திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த படங்களான மகதீரா, நானி,பாகுபலி, ஆர்ஆர்ஆர். இப்படி பல படங்களை எடுத்த திறமையான இயக்குனர். அத்துடன் இவர் கதாநாயகனாக நடித்தாலும் ஹீரோ மாதிரி மக்கள் மனதை வென்று விடுவார்.

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்: தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். அதில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளிவந்த குண்டூர் காரம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இப்படத்தில் மகேஷ் பாபு, மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார்கள். இந்த இயக்குனரை பார்ப்பதற்கு 52 வயது போல தெரியாது அந்த அளவிற்கு இளமை துள்ளலுடன் ஹீரோ மாதிரி ஜொலித்து வருகிறார்.

Also read: 5 வில்லன்களை மனதில் வைத்து கதை எழுதும் மோகன் ராஜா.. தனி ஒருவன் 2க்கு ஆப்ஷனில் இருக்கும் உலக நாயகன்

மோகன் ராஜா: இவர் முக்கால்வாசி ரீமேக் படங்களை எடுத்து பல ஹிட் கொடுத்தவர். அந்த வகையில் முதன் முதலில் தென்காசி பட்டணம் படத்தை தெலுங்கில் ரீமேக் பண்ணி வெற்றி பெற்றார். அதன் பிறகு ஜெயம் ரவிக்கு ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல படங்களை வெற்றியாக கொடுத்தார். தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுத்து சீக்கிரம் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று ஜெயம் ரவி அண்ணனுடன் சண்டை போட்டு வருகிறார். மேலும் மோகன் ராஜாவை பார்ப்பதற்கும் ஒரு ஹீரோ மாதிரி தான் லுக்குடன் இருக்கிறார்.

மகிழ் திருமேனி: தமிழில் முன்தினம் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். அதன் பின் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன், தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார். இதற்கிடையில் நடிகராகவும் டெடி படத்தில் டாக்டர் வரதராஜன் ஆக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் ராஜன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எப்பொழுதெல்லாம் கேப் கிடைக்கிறதோ அப்ப எல்லாம் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

கார்த்திக் நரேன்: இயக்குனராக அறிமுகமான முதல் படமே கிரைம் த்ரில்லர் படமாக துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பின் மாஃபியா மாறன் போன்ற படங்களை கொடுத்தார். இதற்கிடையில் அரவிந்த்சாமி வைத்து நரகாசுரன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பல ஆண்டுகளாக இழுவையில் இழுத்தடித்து வருகிறது. மேலும் இவரை பார்ப்பதற்கு தனுசை போல அச்சு அசலாக பிரதிபலிக்கிறார். அந்த வகையில் ஹீரோவாக அறிமுகமானாலும் மக்களிடமிருந்து வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: சிக்கலில் மாட்டிய மோகன் ராஜா.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெயம்ரவி

Trending News