ஒரு திரைப்படம் மக்களிடையே சென்று வெற்றி பெறுவதற்கு மூல காரணமாக இருப்பது இயக்குனர்கள் தான். அந்த வகையில் தங்கள் மனதில் நினைத்தபடியே காட்சிகளை தத்ரூபமாக எடுப்பதற்காக இயக்குனர்கள் நிறைய மெனக்கெடுவார்கள். அதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பாலோ செய்கிறார்கள்.
அதில் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது, கரடு முரடாக இருப்பது போன்ற பல்வேறு விதமான இயக்குனர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ரஃப் அண்ட் டப் ஆக இருக்கும் ஐந்து இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.
Also read : தமிழில் படம் இயக்க பிடிக்கவில்லை.. விரக்தியில் ஆவேசமாக பேசிய செல்வராகவன்
பாலா: தமிழில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய திரைப்படத்தில் இருக்கும் எதார்த்தம் தான். இவர் நினைத்த காட்சி வரும்வரை நடிகர்களை விடவே மாட்டார். சொல்லப்போனால் இவருடைய திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் நடிகர், நடிகைகள் ஒரு வழி ஆகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இவர் மிகவும் கொடுமைப்படுத்தி, கோபக்கார மனிதராக படப்பிடிப்பு தளத்தில் வலம் வருவாராம்.
செல்வராகவன்: 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி இருக்கும் இவர் தற்போது ஒரு நடிகராகவும் களம் இறங்கி உள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இயல்பாகவே சற்று கரடு முரடாக இருக்கும் இவர் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக பேச மாட்டாராம். அது மட்டுமல்லாமல் பெரிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் காட்சி சரியாக வராவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் நடிக்க சொல்வாராம்.
Also read : பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்
மணிரத்னம்: மிகவும் திறமையான இயக்குனராக இருக்கும் இவர் சுறுசுறுப்பான மனிதரும் கூட. இவருடைய படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அளவுக்கு அதிகமான உழைப்பை கொடுத்தே ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர் எல்லாரையும் சாப்பிடக்கூட விடாமல் வேலை வாங்கி விடுவாராம். இதனாலேயே பலரும் இவருடைய ஷூட்டிங்கில் பயந்து பயந்து நடிப்பார்களாம்.
ஹரி: அதிரடி சண்டை காட்சிகள், விறுவிறுப்பான கதைகளம், ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் என்று தனி பாணியில் படங்களை இயக்கிக் கொண்டிருப்பவர் ஹரி பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும் இவர் ரொம்பவும் சீரியஸாக தான் இருப்பாராம். காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக இவர் படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வார். இதனால் தான் இவருடைய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஏ ஆர் முருகதாஸ்: கஜினி, ரமணா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய முருகதாஸ் சூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர ஸ்ட்ரிக்ட்டாக இருப்பாராம். நடிகர்களை பயங்கரமாக வேலை வாங்குவதில் கில்லாடியான இவர் டெக்னீசியன்களிடமும் கரராக தான் இருப்பார்.
Also read : ஐஸ்வர்யா போல தனுசுக்கு பெண் பார்த்து இருக்கும் செல்வராகவன்.. புது ஜோடி சூப்பர்