வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நெகட்டிவ் க்ளைமாக்ஸுக்கு பெயர்போன 5 இயக்குனர்கள்.. எப்பொழுதுமே அழவைக்கும் பாலா

சிறந்த பொழுதுபோக்கு அம்சத்திற்காகத்தான் ஒரு படம் எடுக்கப்படுகிறது. அந்த மூணு மணி நேரமும் ரசிகர்களுக்கு ஏதாவது நல்ல கருத்துக்களை சொல்லும்படியாக அல்லது நகைச்சுவையாக கொண்டு போகும் படியாக அதிக படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில படங்களில் ரசிகர்கள் தியேட்டரை விட்டு செல்லும்போது மனசை நோகடிக்கும் விதமாக கிளைமாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நெகட்டிவ் கிளைமேக்ஸ் கொடுத்த 5 இயக்குனர்களை பார்க்கலாம்.

சசி : தமிழ் சினிமாவுக்கு பல அற்புதமான படங்களை கொடுத்துள்ளவர் இயக்குனர் சசி. இவருடைய சொல்லாமலே படம் ரசிகர்களுக்கு சற்று மன கஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் பூ படத்தில் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு நெருடலாகவே அமைந்திருந்தது.

Also Read :விஜய்யின் கேரியரை உயர்த்திய விக்ரமன்.. கிளைமாக்ஸை மாற்றியதால் படம் ஹாட்ரிக்

விக்ரமன் : குடும்பங்கள் கொண்டாடும் படத்தை கொடுப்பவர் இயக்குனர் விக்ரமன். இவருடைய சூரிய வம்சம், வானத்தைப்போல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவருடைய படத்தில் உன்னை நினைத்து மற்றும் பூவே உனக்காக படம் நெகடிவ் கிளைமாக்ஸாக அமைந்ததாக சிலர் கருதுகின்றனர். ஆனால் ரசிகர்கள் விருப்பப்படி படம் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

பிரபு சாலமன் : இயற்கை எழில் மாறாத படங்களை கொடுப்பதில் வல்லவர் இயக்குனர் பிரபு சாலமன். இவருடைய படங்களில் கும்கி மற்றும் மைனா படங்கள் ரசிகர்களை கனத்த இதயத்துடன் தியேட்டரில் இருந்து வெளிவர செய்தது. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின்களை கடைசி வரையில் சேர முடியாத அளவுக்கு முடிவை அமைத்துள்ளார் இயக்குனர்.

Also Read :மைனா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? 11 வருடம் கழித்து பிரபுசாலமன் கூறிய உண்மை

டி ராஜேந்தர் : டி ராஜேந்திரன் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் மனதை உருக்கும் படியான காட்சிகளை வைத்திருப்பார். அண்ணன், தங்கை சென்டிமென்ட் போன்ற அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மும்தாஜ் நடிப்பில் இவர் எடுத்த வீராச்சாமி படத்தின் கிளைமேக்ஸ் நெகட்டிவ்வாக அமைந்திருந்தது.

பாலா : தமிழ் சினிமாவில் வித்யாசமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பெரும்பான்மையான படங்களில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் தான் அமைந்திருக்கும். சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் என எல்லாவற்றிலுமே எதிர்மறையான கிளைமேக்ஸை வைத்திருப்பார். இப்போதும் பாலா அதையே தான் பின்பற்றி வருகிறார்.

Also Read :பொருத்து பொருத்து பார்த்து பொங்கி எழுந்த சூர்யா.. வணங்கான் படப்பிடிப்பில் பாலா செய்த 5 தில்லாலங்கடி வேலை

Trending News