வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் கூட இனி சேரவே முடியாத 5 இயக்குனர்கள்.. போஸ்டரே வெளியிட்டு பல்பு வாங்கிய கௌதம் மேனன்

5 Directors Who Failed To Use Actor Vijay: அதிர்ஷ்டம் என்பது ஒருமுறைதான் கதவை தட்டும் என்பது போல் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் தானாக விரும்பியே சில இயக்குனர்களின் கதைகளுக்கு ஓகே சொன்ன பின்பும் இயக்குனர்களின் தாமதத்தாலும் நிதி பிரச்சனைகளாலும் விஜய்யுடன் இணைய இயலாது போன அந்த இயக்குனர்களை பற்றி காணலாம்.

சேரன்: சமூக கருத்துகளை சென்டிமென்ட்டுடன் கலந்து குடும்பப் பாங்கான திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவரான சேரன் அவர்கள், ஆட்டோகிராப் கதையை முதலில் விஜய்யை வைத்து தான் ரெடிபண்ணினாராம். விஜய்யும் இப்படத்திற்கு ஒப்புக்கொள்ளவே சேரனின் கால்ஷீட் பிரச்சனையால் இருவரும் இணையாமல் போயினர்.  இதை சமீபத்தில் வெளிப்படுத்திய சேரன் அவர்கள் நாங்கள் இணைவதாக இருந்தாலும் இனி 10 வருடங்களுக்கு விஜய் ரொம்ப பிசி, அவரை பிடிக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியுள்ளாராம்.

சுந்தர் சி: விஷால் நடித்து சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படத்தின் கதை விஜய் காக பிரத்தியேகமாக சுந்தர் சி ரெடி பண்ணியது. கதை கூறிய போது முதல் பாதி நன்றாக உள்ளது. இரண்டாம் பாதியை மாற்ற முடியுமா என்று விஜய் கேட்க கதையில் மாற்றம் செய்யாமல் விஷாலை வைத்து எடுத்து பிளாப்பாகியது வேறு கதை. இன்றளவும் விஜய்யை வைத்து படம் பண்ண முடியாதது வருத்தத்தை அளிக்கிறது என்று புலம்புகிறார் சுந்தர் சி.

Also read: விஜய்க்காக அடுத்த படம் பண்ண போகும் 5 டைரக்டர்ஸ்.. பிடிக்கவில்லை என்றாலும் விடாமல் துரத்தும் வேதாளம்!

மிஷ்கின்: லியோ பட விழாவில் விஜய் ஒரு லெஜண்ட், நல்ல மனிதன் என பாராட்டிய மிஷ்கின் அவர்கள், விஜய்க்காக ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதையை ரெடி பண்ணி காத்து கிடக்க விஜய்யின் பிசியான ஸ்செடுலில் கண்டிப்பாக அவரை வைத்து எடுக்க முடியாது என மனதை தேற்றி விட்டு தற்போது விஜய் சேதுபதியை உடன் ஒப்பந்தமாகி உள்ளாராம்  மிஷ்கின்.

செல்வராகவன்: நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த செல்வராகவன் விஜய்யை பற்றி “விஜய்யை மாதிரி நடனமாட கூடியவர் தமிழ் சினிமாவில் வேறு யாரும் இல்லை” என புகழ்ந்து தள்ளினார் விஜய்யுடனான படங்கள் பற்றிய நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விஜய் உடன் படம் பண்ண நிறைய வாய்ப்பு வந்துச்சு ஆனால் ஒரு சில காரணங்களால் அது கைகூடாமல் போனது என்ற தனது வருத்தத்தை பதிவு செய்தார் செல்வராகவன்.

கௌதம்  வாசுதேவ் மேனன்: தமிழ் சினிமாவில் காதலையும் காவலையும் வித்தியாசமான கோணத்தில் அற்புதமாக வெளிப்படுத்தும் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் யோகன். நிதி பிரச்சினையாலும் விஜய்யின் கால்ஷீட் பிரச்சினைகளாலும் போஸ்டர் உடன் நிறுத்தப் பட்டது. காலம் கனிந்தால் கௌதம் வாஸ்து மேனனின் காரியம் கைகூடலாம்.

Also read: கௌதம் வாசுதேவ் மேனன் தலையில் டக்குன்னு எரிஞ்ச பல்பு .. வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Trending News