ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஆளுக்கும், ரசனைக்கும் சம்பந்தமே இல்லாமல் படம் கொடுத்த 5 இயக்குனர்கள்.. விஜய்க்கு மோசமான தோல்வியை கொடுத்த அழகம் பெருமாள்

5 Directors: தன் கனவுக்கும், கற்பனைக்கும் உயிர் கொடுக்கும் விதமாய் சினிமாவில் படம் எடுத்து வரும் இயக்குனர்கள் ஒரு சிலரே புகழின் உச்சிற்கு சென்று இருக்கின்றார்கள். இந்த வரிசையில் ஆளுக்கும் ரசனைக்கும் சம்பந்தமே இல்லாமல் படம் எடுத்த 5 இயக்குனர்களை பற்றி இங்கு காண்போம்.

அழகம்பெருமாள்: இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகருமான அழகம்பெருமாள் படைப்பில் வெளிவந்த படங்கள் தான் டும் டும் டும், ஜூட், உதயா. இவர் மணிரத்னமின் உதவி இயக்குனர் ஆவார். டும் டும் டும் படத்தில் எதார்த்தத்தை மீறி இவர் மேற்கொண்டு கதை, நல்ல விமர்சனங்களை பெற்று கமர்சியல் ஹிட் கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர் விஜய்யை வைத்து மேற்கொண்ட உதயா படம் படும் தோல்வியை சந்தித்தது.

Also Read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட சந்தானம்.. பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பொழப்பு சிரிப்பா சிரிக்குது

ரவி மரியா: இவர் இயக்கத்தில் மேற்கொண்ட படங்கள் தான் மிளகா, ஆசை ஆசையாய். அவ்வாறு படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ரவி மரியா. மேலும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 25வது படத்தை ஜீவா நடிப்பில் இவர்தான் இயக்கியிருக்கிறார். இருப்பினும் இப்படம் பெரிதளவு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாரிமுத்து: நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து தன் சொந்த முயற்சியில் இயக்கிய படங்கள் தான் கண்ணும் கண்ணும், புலி வால். பிரசன்னா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் கண்ணும் கண்ணும். இப்படி ஒரு படம் வந்ததே தெரியாத அளவிற்கு இப்படத்தின் கதை அமைந்திருந்த காரணத்தால், திரை உலகமே வேண்டாம் என தற்போது சீரியல் பக்கம் இறங்கி உள்ளார் மாரிமுத்து.

Also Read: அண்ணாந்து பார்க்க வைத்த தனுஷின் மொத்த சொத்து மதிப்பு.. 40 வயதில் பல கோடிக்கு அதிபதி

சித்ரா லக்ஷ்மணன்: காமெடி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை திரை உலகில் காட்டிக் கொண்டவர் சித்ரா லட்சுமணன். இவர் இயக்கத்தில் 1988ல் வெளிவந்த படம் தான் சூரசம்ஹாரம். இப்படத்தில் கமலஹாசன், நிரோஷா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றி நடித்திருப்பார்கள். மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது. தற்பொழுது யூடியூப் சேனல் மேற்கொண்டு நேர்காணல் செய்து வருகிறார்.

ராஜ்கபூர்: வில்லனாகவும், குணசேத்திர நடிகராகவும், இயக்குனராகவும் தன் திறமையை வெளிகாட்டியவர் ராஜ்கபூர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களை இயக்கி உள்ளார். அதிலும் குறிப்பாக 1999ல் அஜித் குமார், கார்த்திக், மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றும நடித்த படம் தான் ஆனந்த பூங்காற்றே. இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று கமர்சியல் ஹிட் கொடுத்தது.

Also Read: ஆதி புருஷுக்கு போட்டியாக வரும் புராணம்.. பிரம்மாண்ட இயக்குனருக்காக புது அவதாரம் எடுக்கும் கமல்

Trending News