தமிழ் சினிமாவில் பல்வேறு கதை அம்சங்களுடன் கூடிய பல ஹிட் படங்களை கொடுத்த இந்த 5 இயக்குனர்கள் தங்களின் படங்களில் இசைஞானி இளையராஜாவின் இசையில் மட்டும் ஒரு படத்தினைக் கூட கொடுக்கவில்லை. அதிலும் ஷங்கர் சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லை.
ஷங்கர்: பிரபல இயக்குனர் ஆன இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிக்கும் படங்களில் புதுவிதமான தொழில்நுட்பங்களையும் பிரம்மாண்டமான கற்பனைக்கு எட்டாத காட்சிகளையும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்டக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவரது தயாரிப்பில் வெளிவந்த முதல்வன் படத்தில் அதிரடியான சமூக மாற்று கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல எந்திரன் போன்ற தொழில்நுட்பம் கொண்ட திரைப்படத்தினையும் தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். மேலும் ஷங்கரின் முதல் சாய்ஸ் எப்போதுமே ஏஆர் ரகுமான் ஆகா தான் இருப்பார். அந்த சமயத்தில் எல்லா இயக்குனர்களும் தலையில் தூக்கிக் கொண்டாடும் இளையராஜாவை சுத்தமாகவே கண்டு கொள்ள மாட்டார்.
விக்ரமன்: இயக்குனராக புது வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் அதிகம் கமர்சியல் படங்களை கொடுத்துள்ளார். இனிமையான பாடல்களையும் குடும்ப பாங்கான கதை மற்றும் காட்சி அமைப்புகளையும் அதிக அளவு தனது படைப்புகளில் வெளிப்படுத்தக் கூடியவர்.
இவருடைய படங்களில் பெண்களின் மீதான சமூக அக்கறை அதிகமாகவே இருக்கும். தற்பொழுது இவர் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த விக்ரமன் தனது இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஒரு படத்தினை கூட கொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
Also Read: மீண்டும் அதல பாதாளத்தில் காலை விடும் ஷங்கர்.. நட்புக்காக செய்யத் துணிந்த காரியம்
சுந்தர் சி: இவர் திரைப்பட இயக்குனரும் நடிகருமான இவர் தமிழில் “தலைநகரம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகிற்கு தனது என்ட்ரியை கொடுத்தார். சுந்தர் சி தனது இயக்கத்தில் தற்பொழுது வரை 24 படங்கள் தயாரித்துள்ளார். இவர் இயக்கத்தில் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த அதிரடி திரில்லர் திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்தது.
பல ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சி ட்ரெண்டிங்கில் இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு அதிக அளவு வாய்ப்பினை அளித்துள்ளார். ஆனால் தற்பொழுது வரை இசைஞானி இளையராஜா இசை அமைப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் கூட ஒப்பந்தமாகவில்லை.
லிங்குசாமி: இயக்குனர் விக்ரமனியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த இவர், 2001 ஆம் ஆண்டு “ஆனந்தம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவர் திருப்பதி ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படங்களான ரன், சண்டக்கோழி, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது தயாரிப்பில் வெளிவந்த பல ஹிட் படங்களில் ஏகப்பட்ட இசை அமைப்பாளர்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் தற்பொழுது வரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை மட்டும் தனது படத்தில் பயன்படுத்தவில்லை.
Also Read: இளையராஜாவின் ஆணவத்தை அடக்கிய பாலச்சந்தர்.. பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய படம்
ஹரி: இவர் ஆக்சன் கலந்த அதிரடியான திரைப்படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்பொழுது வரை 12 படங்களை இயக்கியுள்ளார் அதிலும் பல ஹிட் படங்களான சாமி, சிங்கம், ஆறு, பூஜை போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கக் கூடியவையாக இருந்து வருகிறது. இயக்குனர் ஹரி பல்வேறு இசை அமைப்பாளர்களை தனது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் இசைஞானியின் இசையை மட்டும் தற்பொழுது வரை தனது ஒரு படத்தில் கூட பயன்படுத்தவில்லை.
இந்த 5 இயக்குனர்களும் தங்களது படங்களில் இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்களின் இசையை தங்களது படங்களில் பயன்படுத்தி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.
Also Read: இளையராஜாவை மட்டுமே நம்பி 19 படத்தை இயக்கிய பிரபலம்.. பிசிறு தட்டாமல் இசைஞானி செய்த காரியம்