வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் வெறுத்து ஒதுக்கிய பின் கேரியரை இழந்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவன் கதி அதோ கதி தான் போல

சினிமா துறையில் டாப் ஹீரோக்களாக இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களின் முன்னேற்றத்திற்காக அஸ்திவாரம் போடக்கூடிய இயக்குனர்களை மட்டுமே தேடி வருகின்றனர். அந்த வகையில் மாஸ் ஹீரோவாக இருக்கக்கூடிய அஜித்  இயக்குனர்களுடன் கூட்டணி போட்டு பின் அந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார். இதனால் தங்கள் கேரியரையே இயக்குனர்கள் இழந்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இங்கு காண்போம்.

மகா: 2000 ஆம் ஆண்டு இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வந்த படம் மகா. இப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அஜித்திற்கு படத்தின் ஆரம்பத்திலேயே விபத்து ஏற்பட்ட காரணத்தினால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு இதனைத் தொடர்ந்து மற்ற படங்களில் கவனத்தை செலுத்த தொடங்கினார். இதனால் பெரிய இயக்குனர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டிய நந்தா பெரியசாமி பிரபல நடிகரின் படம் கைநழுவிப் போனதால் தனது கெரியரில் மீண்டும் எழ முடியாமலேயே போய்விட்டார்.

Also Read: நான் என்றும் அஜித்தின் ரசிகன் தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மூன்றெழுத்து நாயகன்

மிரட்டல்: தீனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மிரட்டல் என்னும் படம் உருவாக இருந்தது. ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அஜித் நடிக்க இருந்த மிரட்டல் படம் தான் பின்னாலில் கஜினி என்னும் பெயரில் சூர்யா நடிப்பில் வெளிவந்தது. சமீப காலமாகவே இவரின் படங்கள் எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. தற்பொழுது ஒரு படத்தை இயக்க ஹீரோவிற்காக அடைந்து கொண்டிருக்கிறார்.

நான் கடவுள்: 2009 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் கடவுள். முதலில் இப்படத்தில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. படத்திற்காக மூன்று மாதம் வரை முடி எல்லாம் வளர்த்து காத்திருந்த அஜித்திற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. படத்தின் கதையை ஸ்பாட்டில் மட்டுமே சொல்வேன் என்று இயக்குனர் கூறியதால் அஜித் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். இப்பொழுது வணங்கான் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த பாலாவிற்கு இதுவும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் இவரின் கேரியரையை  ஆட்டம் கண்டுள்ளது. 

Also Read: ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்ட அஜித்.. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு நடந்த வாய்க்கா தகராறு

நியூ: எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த திரைப்படம் நியூ. இதில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. இதனால் தான் இயக்கும் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கும் படங்கள் தோல்வியில் முடிந்ததால் சினிமாவில் இவரால் பிரபல இயக்குனராக உச்சம் தொட முடியவில்லை.

ஏகே 62: துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் படம் ஏகே 62. ஆனால் இவரின் கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியுள்ளார். பிரபல நடிகரின் படம் கைநழுவி போனதால் இனி விக்னேஷ் சிவனின் கேரியரில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்  இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: சத்தமில்லால் அடி வாங்கிய விஜய் பட தயாரிப்பாளர்கள்.. அஜித் வைத்த ஆப்பு

Trending News