Best directors for suriya: சூர்யா சினிமாவிற்குள் நுழைந்த பொழுது என்னடா இவருக்கு நடிக்கவும் தெரியல, ஆடவும் தெரியல இவர் எல்லாம் எதுக்கு நடிக்க வந்தார் என்று பலரும் கேலி கிண்டல் பண்ணும் அளவிற்கு தான் ஆரம்பத்தில் சூர்யாவின் நடிப்பு இருந்தது. ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் என்னாலும் முடியும் என்று கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பை கற்றுக் கொண்டு வந்தார்.
அப்படி வந்த சூர்யா மீது சில இயக்குனர்கள் முழு நம்பிக்கையை வைத்து தரமான கதாபாத்திரத்தை கொடுக்கும் அளவிற்கு துணிந்திருக்கிறார்கள். அவர்கள் அப்பொழுது எடுத்த முடிவுதான் சூரியவை தற்போது முன்னணி ஹீரோவாக தூக்கிக் கொண்டாட வைத்திருக்கிறது. அப்படி சூரியாவிற்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு முக்கிய இயக்குனர்கள் யார் என்பதையும், எந்த படம் மூலம் வளர்ந்து நிற்கிறார் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
சூர்யாவுக்கு கைகொடுத்து தூக்கி விட்ட இயக்குனர்கள்
பாலா: சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாலா, சிறந்த இயக்குனர் சிறந்த திரைப்படம், தேசிய திரைப்படம் போன்ற விருதுகளை வாங்கும் அளவிற்கு முதல் படத்திலேயே சம்பவத்தை செய்து விட்டார். இதனை தொடர்ந்து இவருடைய இரண்டாவது படமான நந்தா படத்தில் சூர்யாவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து மெருகேற்றி இருக்கிறார். அதுவரை சூர்யா, கமர்சியல் படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நந்தா படத்திற்கு பிறகு தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதோடு மட்டுமில்லாமல் இவருடைய நடிப்பை பார்த்த பிறகு பாலா அடுத்து இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவிற்கு ஒரு தரமான கதாபாத்திரத்தை கொடுத்து அனைவரையும் மிரட்டி இருக்கிறார். இப்படி இந்த இரண்டு படங்கள் மூலம் சூர்யாவிற்கு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த சூர்யா தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார். அதனால் தான் இப்பொழுது பாலா இயக்கிய வணங்கான் படத்தில் சூர்யா கமிட் ஆகி பிறகு ஏற்பட்ட மனஸ்தாபனங்களால் அதிலிருந்து விலகி விட்டார்.
கௌதம் மேனன்: சூர்யாவை ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்களை கவர வைத்த பெருமை கௌதம மேனனுக்கு தான் உண்டு. ஏனென்றால் கௌதமேனன் எத்தனையோ படங்களை இயக்கியிருந்தாலும் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படத்தை மறக்க முடியாத அளவிற்கு சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக அனைவரையும் கவர்ந்தது. அந்த வகையில் இவர்களுடைய காம்போவையும் அடிச்சுக்க முடியாது.
கே.வி ஆனந்த்: பல படங்களின் மூலம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவிற்கு அயன், மாற்றான் மற்றும் காப்பான் போன்ற மூன்று படங்களை வித்தியாசமான ஜோனரில் கொடுத்தார். அந்த வகையில் இந்த மூன்று படங்களுமே சூர்யா நடிப்பில் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது.
ஹரி: அதிரடி மற்றும் மசாலா போன்ற கலவையான படங்களை எடுப்பதில் இவரை முந்துவதற்கு ஆளே கிடையாது. அப்படிப்பட்ட இவர் சூர்யாவிற்காக ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை கொடுத்திருக்கிறார். இன்னும் முடியலை என்று சொல்வதற்கு ஏற்ப சிங்கம் படத்தின் அடுத்த பாகத்திற்கும் தயாராகி இருக்கிறார்.
ஏஆர் முருகதாஸ்: கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் சில நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சூர்யாவும் அதே மாதிரி நடிப்பார் என்று ரசிகர்களுக்கு நிரூபித்து காட்டியவர் தான் ஏ ஆர் முருகதாஸ். கஜினி படத்தை இப்பொழுதும் கொண்டாடும் வகையில் சூர்யாவை வைத்து வெற்றி கொடுத்திருக்கிறார். அதே மாதிரி ஏழாம் அறிவு படத்தின் மூலமும் ஹிட் அடித்து இருக்கிறார்.
ஆயிரம் கோடி வசூலுக்கு தயாராகிய சூர்யா
- Kanguva Review – வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் கங்குவா
- புறநானூறு தள்ளிப் போக சுதா கொங்கரா சொன்ன காரணம்
- ஒரு வழியா வாடி வாசலுக்கு கிடைத்த நல்ல செய்தி