திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிகைகளை திருமணம் செய்து கேரியரை தொலைத்த 5 இயக்குனர்கள்.. விக்னேஷ் சிவனை கதறவிடும் சினிமா

சினிமாவில் நடிகைகள் கிசுகிசுக்கப்படுவது, காதலித்து திருமணம் செய்வது என்பது சகஜமான ஒன்று தான். சில நடிகைகள் ஹீரோக்களையும், சிலர் வில்லன்களை, சிலர் தயாரிப்பாளர்களையும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர்களை திருமணம் செய்துக்கொண்ட நடிகைகளும் தமிழ் சினிமாவில் ஏராளம். அந்த வகையில் நடிகைகளை மனைவியாக்கி கேரியரை தொலைத்த 5 இயக்குனர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா: கடந்தாண்டு திருமணம் செய்த இந்த ஜோடி, கல்யாணமானது முதல் தற்போது வரை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில் நயன்தாரா திருமணமான கையோடு ஷாரூக்கானுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ஆனால் விக்னேஷ் சிவனின் கதிதான் அதோகதியாகியுள்ளது. அஜித்தின் ஏகே 62 கூட்டணி திருமணத்திற்கு முன்பாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், திடீரென இக்கூட்டணி நிராகரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மன வேதனையில் வாழ்ந்து வருகிறார்.

Also Read: மனைவி பேச்சு மந்திரம் என வாழும் 5 கணவன்மார்கள்.. நயன்தாரா பேச்சை தட்டாத விக்னேஷ் சிவன்

சுந்தர் சி – குஷ்பூ: கடந்த 2000 ஆண்டில் இத்தம்பதிக்கு திருமணமான நிலையில் குஷ்பூ, சில படங்களில் கமிட்டாகி நடித்து விட்டு அப்படியே துணை நடிகை, வில்லி என தற்போது வரை மவுசு குறையாமல் உள்ளார். ஆனால் இயக்குனர் சுந்தர் சி திருமணத்திற்கு முன்பாக வரை பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், அதன் பின் அவரது படங்கள் சரிவை சந்தித்தது.

செல்வராகவன் – சோனியா அகர்வால், கீதாஞ்சலி: இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 2010 ஆம் ஆண்டே இருவரும் விவாகரத்து செய்தனர். இவரை தொடர்ந்து இரண்டாவதாக கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குழந்தை, குட்டி என வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் செல்வராகவனின் கேரியர் இரண்டு திருமணங்கள் செய்து நொந்து நூடுல்ஸ் ஆனதால் பறிபோயுள்ளது.

Also Read: முதல் காதலை நினைத்து உருகும் செல்வராகவன்.. தனுஷை தொடர்ந்து நடக்க போகும் விவாகரத்து

ஆர்.கே.செல்வமணி – ரோஜா: நடிகை ரோஜா தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காலத்தில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்த கையோட ஆந்திராவில் செட்டிலான ரோஜா தற்போது அமைச்சராக அங்கு பதவி வகித்து வருகிறார். ஆனால் ஆர்.கே. செல்வமணி எத்தனையோ படங்களை இயக்கி வெற்றிக்கொடுத்தும் திருமணத்திற்கு பின்னர் பல சறுக்கல்கலை சந்தித்து அப்படியே படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டார்.

ராஜகுமாரன் – தேவயானி: வீட்டை விட்டு ஓடி வந்து நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியலகளில் வலம் வந்த தேவயானி சின்னத்திரையில் கொடிக்கட்டி பறந்தார். ஆனால் ராஜகுமாரன் சில படங்கள் இயக்கிய நிலையில், திருமணத்திற்கு பின்னர் பெரிதாக படம் பண்ணாமல் அப்படியே காணாமல் போய்விட்டார்.

Also Read: இயக்குனரை திருமணம் செய்த 6 ஹீரோயின்கள்.. காதலுக்கு அழகு முக்கியமில்லை என நிரூபித்த தேவயானி

Trending News