வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கேமியோ ரோலில் மாஸ் காட்டிய 5 இயக்குனர்கள்.. சஸ்பென்ஸ் என்ட்ரியில் தெறிக்க விட்ட லோகேஷ்

Director Lokesh Kangaraj: படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதையை உருவாக்கும் இயக்குனர்கள் தற்பொழுது நடிக்கவும் களம் இறங்கி விட்டார்கள். அந்த வகையில் தன் நடிப்பை மேற்கொண்டு வெற்றி கண்ட இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு.

அவ்வாறு தான் இயக்கிய படங்களில், கேமியோ ரோல் மூலம் ஹீரோக்களுடன் இணைந்து அசத்திருப்பார்கள். இத்தகைய கேமியோ ரோலை ஏற்று பெரிதும் பேசப்பட்ட 5 இயக்குனர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

Also Read: விஜய் மீது அப்செட்டில் இருக்கும் சமந்தா.. பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததற்கு இதுதான் காரணம்

பிரதீப் ரங்கராஜன்: 2019ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நல்ல கதையோடு, நல்ல விமர்சனத்தை பெற்றுத் தந்த இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றது. இருப்பினும் இப்பட கிளைமாக்ஸ் இல் பிரதீப் ரங்கராஜன் ஆட்டோக்காரன் கதாபாத்திரத்தில் பேசிய வசனம் பெரிதும் ஈர்க்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ்: 2021ல் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படக்கதை மூலம் நல்ல விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் மாஸ் என்ட்ரி கொடுத்திருப்பார். அவை படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.

Also Read: ஹீரோயின் சொன்னா யாரும் நம்பல ஆனா வெற்றி பெற்ற 5 நடிகைகள்.. தமன்னா, சமந்தாவையே ஓரம் கட்டிய மலைவாசி பெண் நடிகை

ஏ ஆர் முருகதாஸ்: 2019ல் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் கத்தி. நல்ல கருத்துள்ள படமாய் இப்படத்தை அமைத்து மக்களிடையே பெரிதும் பேசப்பட்டவர் ஏ ஆர் முருகதாஸ். மேலும் தான் இயக்கிய இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் மூலம் இடம் பெற்று மெசேஜ் கொடுத்திருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது.

எஸ் ஜே சூர்யா: 2000ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் குஷி. இப்படத்தில் விஜய், ஜோதிகா, விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா சாலையை கடக்கும் மக்களோடு மக்களாக கேமியோ ரோலில் இடம் பெற்றிருப்பார். மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று தந்தது.

Also Read: குட்டி பவானி எல்லாம் சும்மாதான்.. அதைவிட 10 மடங்கு பவர்ஃபுல்லான கேரக்டரை கையில் எடுத்த மகேந்திரன்

நெல்சன் திலீப்குமார்: 2022ல் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் பீஸ்ட். இந்த படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் இடம்பெற்ற விஜய் உடன் இணைந்து கிளைமாக்ஸ் பாடலில் நடனம் ஆடி இருப்பார் நெல்சன். தான் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை தீர்த்துக் கொண்டவாறு இப்படத்தில் கேமியோ ரோலில் இடம்பெற்று இருப்பார்.

Trending News