லைக்காவை மண்ணை கவ்வ வைத்து கஜானாவை காலி செய்த 5 இயக்குனர்கள் .. கதற கதற செஞ்சுவிட்ட பிரம்மாண்டம்

Lyca Productions: கத்தி திரைப்படத்தின் மூலம் சினிமா விநியோகிஸ்தம் மற்றும் தயாரிப்பில் தன்னுடைய பயணத்தை தொடங்கியது லைக்கா. அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களில் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியானது.

பெரிய ஹீரோக்களின் படங்களை யார் தயாரிப்பது என்ற மறைமுகப் போட்டி லைக்கா மற்றும் சன் பிக்சர்ஸ் இருந்து வந்தது. ஆனால் ஒரு ஐந்து டைரக்டர்கள் இணைந்து லைக்காவின் மொத்த சோலியையும் முடித்து விட்டார்கள். கஜானாவை காலி பண்ணி தூர்வார விட்டுவிட்டார்கள். அந்த இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்.

மணிரத்னம்: கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் முன்னோட்ட கதை தான் செக்கச் சிவந்தது வானம். இந்த படத்திற்காக மணிரத்தினம் உடன் இணைந்தது லைக்கா. அதன்பின்னர் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களை தயாரிப்பதிலும் மணிரத்தினத்துடன் இணைந்து பணி புரிந்தது. இந்த படங்கள் லைக்கா நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினி படங்களை தொடர்ந்து தயாரித்த லைக்கா நிறுவனம் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனும் கைகோர்த்தது. நல்ல ஒரு கதைக்களம் தான் என்றாலும் எதிர்பார்த்த திரைகதை அமையவில்லை. ஏகப்பட்ட சொதப்பல்கள் நடந்ததால், இந்தப் படம் லைக்காவிற்கு பெரிய நஷ்டத்தை கொடுத்தது. தொலைந்து விட்டது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த ஒரு பேட்டியால் அவர்களால் ஓடிடி பிசினஸில் கூட லாபம் பார்க்க முடியவில்லை.

பி வாசு: சந்திரமுகி படத்தின் முதல் பாகம் சிவாஜி ப்ரொடக்ஷனுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுத்தது. அதை மன கணக்கில் இரண்டாம் பாகத்தை தயாரித்த லைக்காவுக்கு தலையில் பெரிய இடி தான் விழுந்தது. அப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பி வாசு இந்த முறை லைகா நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்.

சங்கர்: லைக்காவை மொத்தமாக காலை வாரிவிட்டது ஷங்கர் தான். 2.0 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறாவிட்டாலும் ரஜினி என்ற பெயரின் மார்க்கெட்டை வைத்து லாபம் பார்த்து விட்டார்கள். ஆனால் இந்தியன் 2 வில் அந்த கதை செல்லுபடி ஆகவில்லை. இஷ்டத்திற்கு படத்தை எடுத்து விட்டு, அதிகமாக இருக்கும் பகுதிகளை இன்னொரு பாகமாக ஆக்கி விடுகிறேன் என கிட்டதட்ட சமையல் செய்வது போல் செய்துவிட்டார் சங்கர். இது லைக்கா என நிறுவனத்திற்கு மிகப்பெரிய படி என்றே சொல்லலாம்.

சுந்தர் சி: மசாலா படங்களின் மன்னன் சுந்தர் சி யும் லைக்கா நிறுவனத்தை பதம் பார்த்து விட்டார். எக்கச்சக்க நட்சத்திரக் கூட்டங்கள், வெளிநாட்டு படப்பிடிப்பு என வந்தா ராஜாவா தான் வருவேன் என்னும் படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் எதிர்பார்த்த லாபத்தை நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை

Next Story

- Advertisement -