சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பல முறை தேசிய விருதை வாங்கிய 5 இயக்குனர்கள்.. இப்பவும் எட்டா உயரத்தில் கே பாலச்சந்தர்

சினிமாவில் மிகப்பெரிய உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசியவிருது. இந்த விருதை நடிகர், நடிகைகள், இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்ட வருகிறது. அவ்வாறு தமிழ் சினிமாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதை பெற்ற ஐந்து இயக்குனர்களை தற்போது பார்க்கலாம்.

வெற்றிமாறன் : வித்தியாசமான கதைக்களத்தை மூலம் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சுவைத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரி வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக வெற்றிமாறன் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.

பார்த்திபன் : சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பார்த்திபன். தற்போது சிங்கிள் சாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான புதிய பாதை மட்டும் ஹவுஸ்ஃபுல் படங்கள் சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

மணிரத்தினம் : காலத்தால் அழியாத படங்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான மௌனராகம், அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் தேசிய விருதை பெற்றது. மேலும் ரோஜா, பாம்பே படங்கள் தேசிய
ஒருமைப்பாட்டு பற்றிய சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை பெற்றது.

பாரதிராஜா : கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை தத்ரூபமாக எடுக்கக்கூடியவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் ஆறு முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். சீதகொகா சிலுகா என்ற தெலுங்கு படத்திற்காக விருது பெற்று இருந்தார். அதன்பின்பு முதல் மரியாதை, வேதம்புதிது, கருத்தம்மா, அந்திமந்தாமரை, கடல் பூக்கள் போன்ற படங்களுக்கு பாரதிராஜா தேசிய விருதை வென்றார்.

கே பாலச்சந்தர் : தமிழ் சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கே பாலச்சந்தர். இவர் ஒன்பது தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இருகோடுகள், அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை என இவர் இயக்கிய படங்கள் சிறந்த தமிழ் படம் என தேர்வானது. தணீர் தணீர், ருத்ரவீணை, ஒரு வீடு இரு வாசல் ஆகிய படங்களை இயக்கிய எதற்காகவும் மற்றும் ரோஜா படத்தை தயாரித்தற்காகவும் தேசிய விருதை பெற்றார். மேலும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது கொடுத்து பாலச்சந்தர் கௌரவிக்கப்பட்டார்.

Trending News