தமிழ் சினிமாவில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதிலும் இளம் ஹீரோக்கள் மட்டும்தான் நடிக்கிறார்கள். முன்னணி ஹீரோக்கள் இன்னொரு ஹீரோ உடன் நடிப்பதற்கு தயங்குகிறார்கள். இதற்கு காரணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான். ஆனால் 90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோக்கள் கூட அசால்ட்டாக இணைந்து தங்களுக்குள் விட்டுக் கொடுத்து, நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.
தளபதி: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி இணைந்து நடித்த திரைப்படம் தளபதி. சினிமாவின் எவர்கிரீன் மூவி என்று சொல்லலாம். இன்றிய தலைமுறை சினிமா ரசிகர்கள் வரை இந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தை ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த படத்தில் வரும் ‘ காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த ஒன்று.
Also Read:ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்
அக்னி நட்சத்திரம்: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அதிரடி ஆக்சன் திரைப்படம் தான் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் அப்போதைய முன்னணி ஹீரோக்களான பிரபு மற்றும் கார்த்திக் இணைந்து நடித்திருந்தனர். பிரபு மற்றும் கார்த்திக் மோதிக் கொள்ளும் காட்சிகளில் தியேட்டரில் அனல் பறந்தது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்கும் கிடைத்தது.
இணைந்த கைகள்: இயக்குனர் ஆபாவாணன் இயக்கத்தில் நடிகர்கள் ராம்கி மற்றும் அருண்பாண்டியன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் நடித்த திரைப்படம் இணைந்த கைகள். இந்த படம் இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும் நேயர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு படம் ஆகும். இந்த படத்தில் வரும் ‘ அந்தி நேர தென்றல் காற்று’ பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
Also Read:முதல் படம் வெற்றிக்காக நாசுக்காக வேலை செய்த பிரபுதேவா.. சொன்னது மாதிரியே செஞ்சி காட்டிட்டாரு
நேருக்கு நேர்: இன்றைய கோலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இந்த படம் அக்னி நட்சத்திரத்தைப் போல, இருவரும் படம் முழுக்க மோதிக் கொள்வார்கள். மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
காதலா காதலா: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடன பெயர் பிரபுதேவா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் காதலா காதலா. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இன்று வரை இந்த படம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.