Vijay : விஜய் அரசியலில் இறங்குவது 100 சதவீதம் உறுதியான நிலையில் சினிமாவுக்கு இதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்தால் அதில் வெற்றி என்பது சிலரால் தான் இரண்டிலுமே பெற முடியும். ஆகையால் விஜய் சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ஒரு நடிகனாக தன்னை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 49 வயதிலும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய் சினிமாவில் இல்லை என்றால் கண்டிப்பாக ஒரு வெற்றிடம் என்பது இருக்கும். மேலும் விஜய் இல்லாத சினிமாவில் நம்பர் ஒன் இடத்திற்காக நடிகர்களுக்குள் போட்டி ஆரம்பித்து விடும். அடுத்ததாக விஜய்யின் படங்கள் என்றாலே திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்படும்.
Also Read : கமல் போல் வாக்குறுதி கொடுக்கும் விஜய்.. ரெண்டு வருஷத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப் போகும் தளபதி
இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு தான் மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கும், அவர்களது வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதைத்தொடர்ந்து விஜய்யை பொறுத்தவரையில் தன்னுடைய படத்தில் பெரும்பான்மையான காட்சிகளை இங்கேயே படமாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைப்பார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் வருமானத்தை பெற முடியும். இப்போது விஜய் நடிக்காமல் போனால் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் விஜய்யின் படத்தை தயாரிக்க போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆகையால் தயாரிப்பாளர்களின் இலாபத் தொகை என்பது மற்ற நடிகர்களை காட்டிலும் விஜய்யின் படங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தது. எனவே தயாரிப்பாளர்களின் தலையில் இடியை இறக்கும்படியாகத்தான் தளபதியின் அரசியல் என்டரி உள்ளது. கடைசியாக விஜய் அரசியலுக்கு வந்தவுடன் அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாறினாலும் ஒரு ரசிகனாக அவரது படத்திற்காக ஏக்கத்தில் தான் இருப்பார்கள்.
Also Read : கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து சொன்ன 5 பிரபலங்கள்.. சக அரசியல்வாதியாய் வரவேற்ற கமல்