வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மகன்களுக்கு எமனாய் அமைந்த 5 தந்தைகள்.. ஒரு காலத்தில் எஸ்டிஆர் கேரியரை கேள்விக்குறியாக்கிய டி ஆர்

Rejected fathers of sons films: பொதுவாக சினிமாவில் தந்தைகள் பிரபலமாக இருந்தால் அவர்களுடைய மகன்கள் சினிமாவிற்கு வரும் பொழுது அவர்கள் எந்த படத்தில் நடிக்கணும், எப்படி நடிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் விஷயத்தை அப்பாக்கள் தான் பார்த்துக் கொள்வார்கள். அப்பொழுது மகன்களுக்கு வந்த நல்ல சான்சை ஏதாவது ஒரு காரணத்தினால் நிராகரித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அப்பாக்கள் மற்றும் மகன்களைப் பற்றி பார்க்கலாம்.

பாக்யராஜ் – சாந்தனு: சாந்தனு சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் ஹீரோவுக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அதை அனைத்தையும் முறைப்படி கற்றுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு  நடிப்பதற்கு பல பெரிய வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது. அதாவது சங்கர் டைரக்ஷனில் பாய்ஸ் படத்தில் சித்தார்த் ரோல், காதல் படத்தில் பரத் கேரக்டர் மற்றும் சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் கேரக்டர். இப்படி தேடி வந்த மூன்று வாய்ப்புகளையும் இவருடைய தந்தையாக இருக்கும் பாக்கியராஜ் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

Also read: பாக்யராஜ் சினிமா கேரியரில் சொதப்பிய 5 படங்கள்.. வாரிசுகளால் மண்ணை கவ்விய திரைக்கதை மன்னன்

டி ராஜேந்திரன் – சிம்பு: இவர் சினிமாவிற்கு அறிமுகமானது இவருடைய தந்தை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம். அதன்பின் இவர் ஹீரோவாக நடித்த பொழுது இவரைத் தேடி வந்த பல வாய்ப்புகளை டி ராஜேந்திரன் நிராகரித்திருக்கிறார். அதாவது மகனின் சம்பளம் பத்தாது என்று தேடி வந்தவர்களை விரட்டி விட்டிருக்கிறார்.

விஜயகுமார்- அருண் விஜய்:  விஜயகுமாரிடம் நிறைய பணம் கொட்டி கிடந்ததால் இவருடைய மகனுக்கு வந்த படத்தை, நான் தான் புரொடியூஸ் பண்ணுவேன் என்று தேவையில்லாத கதைகளை எல்லாத்தையும் செலக்ட் செய்து அந்தப் படத்தை எல்லாம் ஃபெயிலியர் படமாக ஆக்கிவிட்டு இருக்கிறார்.

Also read: பத்தல பத்தல போல் சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் நா ரெடி.. சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் பாடல்

எஸ் ஏ சி- விஜய்: ஆரம்பத்தில் விஜய்யின் சினிமா கேரியரில் படங்கள் அனைத்தையும் தேர்வு செய்யும் முழு அதிகாரமும் இவருடைய அப்பாவிடம் தான் இருந்தது. அப்பொழுது விஜய்யை தேடி வந்த கதாபாத்திரம் என் பையனுக்கு செட்டாகாது என்று வந்த வாய்ப்பு அனைத்தையும் மறுத்திருக்கிறார்.

தியாகராஜன் – பிரசாந்த்: ஆரம்பத்தில் பிரசாந்துக்கு எல்லா விதமாகவும் இருந்து கதையை தேர்வு செய்து ஒரு நடிகர் என்று அங்கீகாரத்தை கொடுத்தவர் இவருடைய அப்பா தான். ஆனால் போகப் போக காலத்திற்கு ஏற்ப கதையை தேர்வு செய்ய தெரியாமல் பழைய பஞ்சாங்கம் மாதிரியே கதையை எதிர்பார்த்ததால் ட்ரெண்டிங் ஆன கதையை ஏற்றுக் கொள்ள முடியாமல் நிராகரித்திருக்கிறார். இதனாலையே பிரசாந்தின் சினிமா கேரியர் தேடும்படியாக அமைந்து விட்டது.

Also read: நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

Trending News