தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாதாரணமாக தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, வெடி ஆகியவை தான் ஞாபகம் வரும். அதிலும் அன்று சினிமா பிரபலங்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அவ்வாறு குடும்பமாக தீபாவளியை கொண்டாடிய 5 பிரபலங்களை பார்க்கலாம்.
விஜயகாந்த் : கேப்டன் விஜயகாந்த் சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் அரசியலில் செயல்பட முடியவில்லை. இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் ஒரே நிற ஆடையில் இன்று தீபாவளி கொண்டாடி உள்ளார்.

Also Read :தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்
பாக்யராஜ் : இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாக்யராஜ். இவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த வருகிறார். பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு மற்றும் மருமகள் கீர்த்தி ஆகியோருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் : தற்போது ஹீரோ வில்லன் என மாறி மாறி மிரட்டி வருகிறார் நடிகர் அருண் விஜய். இவரது தந்தை விஜயகுமார் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அருண் விஜயின் மகனும் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி உள்ளனர்.

Also Read :அருண் விஜய்க்கு பதில் வில்லனாக களமிறங்கும் ஹீரோ.. சிரிப்பு மூட்டும் செட்டாகாத முகம்
பிரசன்னா : சினேகா மற்றும் பிரசன்னா இருவருமே எல்லா பண்டிகையையும் விமர்சையாக கொண்டாடுவார்கள். அதேபோல் இந்த தீபாவளியும் தனது குழந்தைகளுடன் ஒரே நிற ஆடையில் கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜெயம் ரவி : ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தற்போது நலம் பெற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.

Also Read :பொன்னியின் செல்வனால் கொடி பறக்கும் ஜெயம் ரவியின் கேரியர்.. செகண்ட் இன்னிங்ஸ்க்கு ரொம்பிய சூட்கேஸ்