வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மொக்கை காமெடியால் டெபாசிட் இழந்த 5 பட தயாரிப்பாளர்கள்.. அடி மேல அடி வாங்கும் சந்தானம்

படங்களில் இடம்பெறும் கருத்துள்ள காமெடிகள் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்து விடுகிறது. அவ்வாறு சிறந்த காமெடிகளைக் கொண்டு ஹிட்டாகிய படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அது போன்று தன் நகைச்சுவையால் சிறந்து விளங்கியவர் தான் சந்தானம்.

காமெடி நடிகராக இருந்த இவர் தற்பொழுது பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். அதன்பின் இவரின் காமெடிகள் இவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவரின் படங்கள் வந்த சுருக்கம் தெரியாமல் போய் விடுகிறது. இவரின் மொக்கை காமெடிகளால் டெபாசிட் இழந்த ஐந்து படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read:விடுதலை பட வெற்றிக்கு பின் வெற்றிமாறன் தொடங்கும் 3 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

பிஸ்கோத்: 2020ல் எம் கே ஆர் பி புரோடக்னில் ஆர் கண்ணன் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் பிஸ்கோத். இப்படத்தில் சந்தானம் நான்கு வெவ்வேறு ரோலில் நடித்திருப்பார். ஆனாலும் இப்படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இப்படம் கோவிட் காலங்களில் வெளிவந்ததாலும் இப்படத்தில் போதிய நகைச்சுவை இல்லாததாலும் இப்படம் டெபாசிட்டை இழந்தது.

பாரிஸ் ஜெயராஜ்: 2021ல் கே ஜான்சன் இயக்கத்தில் மற்றும் கே குமார் தயாரிப்பில் வெளிவந்த படம் தான் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் சந்தானம், அனைகா ஜோதி, ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவு நகைச்சுவை இல்லாததால் இப்படமும் இவருக்கு தோல்வியை பெற்று தந்தது.

Also Read:காமெடியனாக வந்து ஹீரோவாக மாறிய 5 நடிகர்கள்.. வயித்தெரிச்சலில் நடிக்க வந்த சந்தானம்

சபாபதி: 2021ல் ஆர் கே சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சபாபதி. இப்படத்தை சி ரவிக்குமார் என்பவர் தயாரித்துள்ளார். மேலும் சந்தானம் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் காமெடி மிகவும் மொக்கையாக இருந்தது. ஆகையால் இப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

குளு குளு: 2022ல் வெளிவந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. சந்தானம் இப்படத்தில் தீவிரமான மற்றும் முதிர்ந்த கேரக்டரில் நடித்திருப்பார். படத்தில் காமெடி நடிகர் இல்லை என்றாலும் சந்தானம் தன் கேரக்டர் காமெடியை காட்டியிருப்பார். இருப்பினும் எஸ் ராஜ் நாராயணனுக்கு இப்படம் பெரும் இழப்பை பெற்று தந்தது.

Also Read:பாம்பைப் போல் கழுத்தை சுற்றிய கடன்.. தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்

ஏஜென்ட் கண்ணாயிரம்: 2022ல் வெளிவந்த காமெடி கலந்த தில்லர் படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இப்படத்தை மனோஜ் பிதா இயக்கி தயாரித்துள்ளார். இப்படமும் பெரிதளவு எதிர்பார்ப்பை பெறாமல் ஃபெயிலியர் ஆனது. மேலும் இதுபோன்ற தொடர் தோல்வியால் சந்தானம் மனம் உடைந்து காணப்படுகிறார். இவரை நம்பி படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் டெபாசிட் இழந்து வருகிறார்கள்.

Trending News