ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஒரே ஹீரோயினை காதலிக்கும் அண்ணன் தம்பி கதையில் உருவான 5 படங்கள்.. தம்பியை கொல்ல துணிந்த அஜித்

நிஜ வாழ்க்கையிலேயே நாம் எதிர்பார்த்த காதல் அமைவது என்பது நிர்ணயமான ஒன்றல்ல. அவ்வாறு இருப்பின் படத்திலும் நாம் எதிர்பாராத விதமாக ஜோடி பொருத்தம் அமைந்து விடுகிறது.

ஒரே பெண்ணை அண்ணன் தம்பி இருவர் காதலித்து அண்ணன் தம்பிக்காக விட்டுக் கொடுப்பதும் மேலும் தம்பி அண்ணனுக்காக விட்டுக்கொடுப்பது போன்ற அமைந்திருக்கும். அவ்வாறு அமைந்த ஐந்து படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: ரஜினியால் படாதபாடு படும் ரோஜா.. பொது இடத்தில் முத்தமிட்டதால் கிளம்பிய அடுத்த சர்ச்சை

கண்ணுபட போகுதய்யா: 1999ல் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த், சிம்ரன், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தில் தன் காதலியை தம்பி விரும்புகிறான் என்பதற்காக காதலை தியாகம் செய்வது போல கதை அமைந்திருக்கும். காதலை விட பாசம் பெரியது என்று உணர்த்தும் விதமாக விஜயகாந்த் நடித்திருப்பார். மேலும் இப்படத்திற்குரிய கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பார் சிம்ரன்.

டூயட்: 1994ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் அண்ணன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணை காதலிப்பார்கள். மேலும் காதலுக்காக பொய் சொல்லி தன் காதலை இழக்கிறார் தம்பி. அதன் பின் உண்மையை அறிந்து அண்ணனை விரும்புகிறார் ஹீரோயின்.இப்படம் முக்கோண காதல் கண்ணோட்டத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

Also Read: பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

சின்னதம்பி பெரியதம்பி: 1987ல் வெளிவந்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், பிரபு,நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தில் இருவரும் தன் மாமா பெண்ணை விரும்புவது போன்று கதை அமைந்திருக்கும். மேலும் தன் காதலை நிரூபிக்க தவறான வழியில் ஈடுபடுகிறார் சத்யராஜ். அதை விரும்பாத ஹீரோயின் பிரபுவை விரும்ப தொடங்குகிறார். இப்படத்தில் சத்யராஜின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி: 1991ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தளபதி. இப்படத்தில் ரஜினி, ஸ்ரீவித்யா, ஷோபனா, அரவிந்த்சாமி, மம்முட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதை தொடர்ந்து இப்படத்தில் ரஜினி, ஷோபனாவை விரும்புவது போன்று அமைந்த காட்சி பெரிதும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவர்களின் காதலை விரும்பாத தந்தைக்காக அரவிந்த் சாமியை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் ஷோபா. இறுதியில் ரஜினி காதலித்த பெண்ணை அவரின் தம்பியான அரவிந்த்சாமி மணந்து கொள்கிறார்.

Also Read: மன அழுத்தத்தால் திருமணமானதை மறந்த நடிகை.. தனக்கே தண்டனை கொடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை

வாலி: 1999ல் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் வாலி. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் காது கேட்காமல் மற்றும் ஊமை கதாபாத்திரத்தில் அஜித் அண்ணனாக நடித்திருப்பார். மேலும் சிம்ரனை விரும்பும் அஜித் தம்பியாகவும் நடித்திருப்பார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இதை பிடிக்காத அண்ணன் தன் விருப்பத்திற்கு இடையூறாக இருக்கும் தம்பியை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார். மேலும் ஹீரோயின் வில்லனை கொல்வது போன்று கதை அமைந்திருக்கும். இறுதியில் தம்பியால் துப்பாக்கியில் சுடப்பட்டு அண்ணன் இறந்து விடுகிறார்.

Trending News