5 films composed by ilaiyaraja daughter Bhavadharani: இசைஞானி இளையராஜா மூலம் அடையாளப்படுத்தப்பட்ட அவரது மகள் பவதாரணி தனது மெல்லிய குரலால் தமிழ் சினிமாவில் சில பாடல்களை பாடி இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். பொதுவெளியில் தன்னை முன்னிறுத்த தயங்கும் கூச்சம் சுபாவம் கொண்ட பவதாரணி, ரேவதி இயக்கத்தில் மித்ர் மை ஃபிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அமிர்தம்: வேதம் புதிது கண்ணன் இயக்கத்தில் நாத்திகம் மற்றும் ஆத்திகத்திற்கு உண்டான புரிதலை, கையாண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் கணேஷ், நவ்யா நாயர் நடித்திருந்தனர். இப்படத்தில் பவதாரணி இசையமைத்து தனது தந்தை இளையராஜாவை ஒரு பாடலை பாட வைத்திருந்தார்.
வெள்ளச்சி: 2013 ஆண்டு வேலு விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த வெள்ளச்சி திரைப்படத்தில் இசையமைத்த பவதாரணி படத்தின் தொடக்கத்தில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்திருந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
Also read: கடைசி நேரத்தில் பவதாரணி சந்தித்த சோதனைகள்.. பாசத்தால் பதறிப் போன இளையராஜா
இலக்கணம்:தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்ற இலக்கணம், பவதாரணி இசையமைத்த மற்றொரு திரைப்படம் ஆகும் இப்படத்தை கருணாநிதிக்கு சிறப்பு காட்சியாக போட்டு காண்பித்தார்களாம் படம் முடிந்ததும் விமர்சனத்தை கூறிய பின் இப்படத்தில் பவதாரணியின் இசையால், தான் ஈர்க்கப்பட்டதாக வெகுவாக பாராட்டினாராம் கருணாநிதி.
கள்வர்கள்: 2018 கள்வர்கள் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார் பவதாரணி. துரதிஷ்ட வர வசமாக பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.
மாய நதி : அசோக் தியாகராஜன் இயக்கத்தின் 2020ல் வெளிவந்த திரைப்படம் மாய நதியாகும். இறுக்கமான கதையம்சம் கொண்ட படத்தில் ஆடுகளம் நரேன்,அப்புகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்திருந்தார் இசை அரசி பவதாரணி. இதுவே பவதாரணி இசை அமைத்த கடைசி படமாகும்
Also read: அபசகுனங்களை முன்பே கணித்த இளையராஜா.. கார்த்திகை தீப திருநாளில் சூழ்ந்த இருள்