சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

இசைஞானியின் இளவரசி பவதாரணி இசையமைத்த 5 படங்கள்.. ரேவதியுடன் சேர்ந்து செய்த தரமான சம்பவம்

5 films composed by Ilayaraja’s daughter Bhavatharini: சினிமாவில் எவ்வளவோ பாடகிகள் இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி. இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அதோடு குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த ஐந்து படங்களுக்கு பவதாரணி தான் இசையமைத்துள்ளார்.

மித்ர் மை பிரண்ட்: நடிகை ரேவதி இயக்குனராக அவதாரம் எடுத்த ‘மித்ர் மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் தான் இசைஞானியின் இளவரசி பவதாரணி இசையமைப்பாளராக அறிமுகமானார். ஷோபனா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் குடும்ப நலனுக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்களின் அவல நிலையை பற்றி கூறியது. அதோடு இந்த படத்தில் ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்த பெண், ஒரு இடம் மாற்ற சூழலுக்கு செல்லும்போது அனுபவிக்கும் கலாச்சார வேறுபாடுகளையும் இதில் விவரித்துக் காட்டினர். இந்த படத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் பவதாரணியின் இசையமைந்தது. அதோடு இந்த படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

பிர் மிலேங்கே: ஷில்பா ஷெட்டி, சல்மான் கான், அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தையும் ரேவதி தான் இயக்கியதோடு, பவதாரணி தான் இசையமைத்தார். இந்த படம் எய்ட்ஸ் விழிப்புணர்வு படமாக இருந்தது. இந்த படம் வெளியானவுடன் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது

அமிர்தம்: பவதாரணி முதலில் இரண்டு பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து, அதன் பின் முதல் முதலாக தமிழுக்கு அமிர்தம் படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தை வேதம் புதிது கண்ணன் கதை எழுதி, இயக்கி, தயாரித்தார். இதில் அறிமுக நடிகர் கணேஷ் மற்றும் நவ்யா நாயர் இவர்களுடன் ராஜீவ், ரேகா, யுகேந்திரன் உள்ளிட்டோரும் இணைந்து நடித்தனர்.

Also Read: இசைஞானியின் மகள் பவதாரணி மறைவுக்கு இதான் காரணம்.. கண்ணீர் விட்டு கதறும் குடும்ப உறவு

பவதாரணி இசையமைத்த ஐந்து படங்கள்

இலக்கணம்: கிராமத்துப் பின்னணியில் படமாக்கப்பட்ட இலக்கணம் என்ற படத்திற்கு பவதாரணி தான் இசையமைத்தார். இதில் அறிமுக நடிகர் விஷ்ணுப்பிரியன் கதாநாயகனாகவும், உமா கதாநாயகியாகவும் நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வசூல் ரீதியாக ஆதரவு கிடைக்காவிட்டாலும், இதில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது.

மாயநதி: 2020 ஆம் ஆண்டு அசோக் தியாகராஜன் கதை எழுதி, இயக்கி, தயாரித்த இந்த படத்தில் ஆடுகளம் நரேன், வெண்பா, அப்புகுட்டி, அபி சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்தனர். தமிழ் சினிமாவில் படிக்கும் காலத்தில் வரும் காதலை பற்றி பல படங்கள் வந்துவிட்டன. அந்த விதத்தில் வந்துள்ள மற்றொரு படம்தான் இந்த மாயநதி. பள்ளிப் பருவத்தில் அறியா காதல் ஒரு மாணவியின் வாழ்க்கையை எப்படி பாழாக்கி விடுகிறது என்பதை உணர்வுபூர்வமாக காட்டினர். அதுவும் இந்த படத்திற்கு பெரிய பலமே பவதாரணியின் இசை தான். எமோஷனலான காட்சிகளில் அப்பா- மகள் இடையேயான பாச பாடலான ‘யாவும் இங்கு நீ தானே’ என்ற பாடல் உணர்வு பூர்வமாக அமைந்தது.

Also Read: இசைஞானியின் வாரிசு பவதாரணியின் சினிமா பயணம்.. தேசிய விருதை பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ சாங்

- Advertisement -spot_img

Trending News