சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோக்கு இணையாக சந்தானம் நடித்த 5 படங்கள்.. தேனடையை விடாமல் துரத்திய பார்த்தா

Director Rajesh and Sandhanam: இயக்குனர் ராஜேஷ் எடுத்த அத்தனை படங்களும் காமெடிக்கு பஞ்சமே இருக்காத அளவிற்கு நகைச்சுவையாக அமைந்திருக்கிறது. அதில் முக்கால்வாசி சந்தானத்தை, ஹீரோக்கு இணையாக நடிக்க விட்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அப்படி இவர் இயக்கத்தில் சந்தனம் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

சிவா மனசுல சக்தி: எம்.ராஜேஷ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜீவா, அனுயா பகவத், சந்தானம், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஜீவா, சிவா என்ற கேரக்டரில் காதல், நக்கல் அனைத்தையும் கலவையாக கொடுத்த படமாக வெளிவந்திருக்கும். இதில் சந்தானம் மற்றும் ஜீவா இவர்களுடைய காமெடி ரொம்பவே ஆர்பாட்டமாகவும் கலக்கல் ஆகவும் அமைந்திருக்கும்.

Also read: மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிவிட்டார்.. மொத்தத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என கூறிய உதயநிதி

ஒரு கல் ஒரு கண்ணாடி: எம்.ராஜேஷ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளிவந்தது. இதில் உதயநிதி, சந்தானம், ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் உதயநிதி சரவணன் ஆகவும், சந்தனம் பார்த்தா என்ற கேரக்டரிலும் நண்பர்களாக இருவரும் பட்டைய கிளப்பி இருப்பார்கள். காதல் மற்றும் காமெடிக்கும் பஞ்சமே இல்லாத வகையில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றிருக்கும்.

பாஸ் என்கிற பாஸ்கரன்: எம் ராஜேஷ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆர்யா பாஸ்கரன் ஆகவும், சந்தானம் தல தளபதி என்ற பெயரில் நல்ல தம்பியாக நடித்திருப்பார். இதில் ஆர்யா சந்தனம் காம்பினேஷன் அல்டிமேட் ஆக அமைந்திருக்கும். அத்துடன் இவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாத அளவிற்கு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும்.

Also read: ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியின் Mr X.. துணிவோடு சாகசத்திற்கு தயாரான அஜித் ஹீரோயின்

ஆல் இன் ஆல் அழகுராஜா: எம் ராஜேஷ் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் மற்றும் சந்தனம் இவர்கள் இருவருமே இரட்டை வேடத்தில் இளைஞர் மற்றும் பிளாஷ்பேக்கில் முதியவராகவும் நடித்திருப்பார்கள். இதில் சந்தானம் பெண் வேடமிட்டு சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி என்ற காமெடியை மறக்க முடியாத அளவிற்கு பிரமாதமாக பண்ணியிருப்பார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க: எம் ராஜேஷ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆர்யா, சந்தானம், தமன்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆர்யா சரவணனாகவும், சந்தானம் வாசு என்ற கேரக்டரில் இருவரும் சிறந்த நண்பர்களாக நடித்திருப்பார்கள். இதில் இவர்கள் சேர்ந்து செய்யும் அலப்பறைக்கு அளவே கிடையாது. இதில் தமன்னாவும் அவர் பங்குக்கு காமெடியை வெளுத்து வாங்கி இருப்பார். ஆக மொத்தத்தில் இப்படம் நகைச்சுவைக்கு மொத்த உருவமாக அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

Also read: ஆர்யாவால் பட இயக்குனரை துரத்தி விட்ட அருண் விஜய்.. அவனுக்கு சாவு பயத்தை காட்டிட்ட எனக்குமா?

Trending News