திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அரசியலுக்கு முன் சீமான் இயக்கிய 5 படங்கள்.. சாக்லேட் பாயை ஆக்ஷன் நடிகராக மாற்றிய தம்பி

தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான வலம் வரும் சீமான், முதலில் திரைத்துறையில் நடிகராகவும்,இயக்குனராகவும் வலம் வந்தவர். இவரது நடிப்பில் வெளியான மாயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்கள் சக்கை போடு போட்டவை. இதனிடையே சீமான் இயக்கிய 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பாஞ்சாலங்குறிச்சி: 1996 ஆம் பிரபு, மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் தான் சீமான் இயக்கிய முதல் படமாகும். இப்படம் நடிகர் பிரபுவிற்கு இன்னொரு சின்னத்தம்பி திரைப்படம் என்று சொல்லும் அளவிற்கு மாபெரும் ஹிட்டானது. தேவா இசையில் வெளிவந்தஅத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில் 12 கோடி வரை வசூல் வேட்டை கொடுத்த படமாகும்.

Also Read: விஜய்-யின் மீது அக்கறை காட்டாத சீமான்.. அடுத்த தூண்டில் யாருக்கு தெரியுமா.?

இனியவளே: 1998 ஆம் ஆண்டு மீண்டும் பிரபுவின் கூட்டணியில் இயக்கிய திரைப்படம் தான் இனியவளே. இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக சுவலக்ஷ்மி நடித்திருப்பார். படத்தின் கதை புதிதாக இல்லாததால் இப்படம் கலவையானா விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் தோல்வியையடுத்து நடிகர் பிரபுவிற்கு படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வீரநடை: நடிகர் சத்யராஜ், குஷ்பு, உள்ளிட்டோர் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வீரநடை படம் ரிலீஸானது. ஆக்ஷன், காமெடி என இப்படத்தின் காட்சிகள் அமைந்த நிலையில், இப்படம் பெரிய அளவில் சீமானுக்கு கைகொடுக்கவில்லை. பெரிய கருப்பன் கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜின் நடிப்பு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: என் கதையை திருடிட்டாங்க.. பிரபல இயக்குனரிடம் பஞ்சாயத்தை கூட்டும் அண்ணன் சீமான்

தம்பி: 6 வருடங்கள் கழித்து நடிகர் மாதவனின் நடிப்பில் உருவான தம்பி படம், தமிழ் சினிமாவின் வித்யாசமான திரைப்படமாக அமைந்தது. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்த நிலையில், சீமான் எழுதிய படத்தின் வசனமும் தெறிக்கவிட்டிருக்கும். சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனை ஆக்ஷன் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்த்தார் சீமான். இப்படத்தின் சிறந்த வசனத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் விருது சீமானுக்கு வழங்கப்பட்டது.

வாழ்த்துக்கள்: மீண்டும் மாதவனுடன் இணைந்து 2008 ஆம் ஆண்டு வெளியான வாழ்த்துக்கள் திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவிலேயே இந்த படத்தில் தான் ஆங்கில வார்த்தைகள் எதுவும் இல்லாத திரைப்படமாக வாழ்த்துக்கள் படத்தை சீமான் இயக்கினார். இத்திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று தோல்வியுற்ற நிலையில், இதுவே சீமான் கடைசியாக இயக்கிய படமாகும்.

Also Read: தமிழ் சினிமா உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?.. அதிரடியான பதிலைச் சொன்ன சீமான்

Trending News