MGR 5 Romantic Movies: என்னதான் இப்பொழுது பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தாலும், என்றுமே காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பவர் எம்ஜிஆர் தான். அந்த அளவிற்கு இவரை ஊரே போற்றி கொண்டாடி வந்தார்கள். அப்படிப்பட்ட இவர் நடிக்கும் காலத்தில் மோசமான காட்சிகளில் நடித்த ஐந்து படங்கள் இருக்கிறது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
குடியிருந்த கோவில்: கே ஷங்கர் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு குடியிருந்த கோவில் திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜஸ்ரீ மற்றும் எம் என் நம்பியார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் துள்ளுவதோ இளமை என்ற பாடலில் எம்ஜிஆர் ரொம்பவே துள்ளலாக நடிகையுடன் ஆட்டம் போட்டு பார்ப்பவர்களை கிரங்கடித்து இருப்பார்.
கலங்கரை விளக்கம்: கே சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு கலங்கரை விளக்கம் திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், சரோஜாதேவி, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பொதுவாக அந்த காலத்து படங்களில் ரொம்பவே டச்சிங் இல்லாமல் பட்டும் படாமல் தான் நடிகர்கள் நடிகைகள் நடித்திருப்பார்கள். ஆனால் எம்ஜிஆர் மட்டும் இதில் நடிகைகளை உரசிக்கொண்டு கட்டிப்பிடித்து நடித்திருப்பார்.
பணத்தோட்டம்: கே சங்கர் இயக்கத்தில் 1963ஆம் ஆண்டு பணத்தோட்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், சரோஜாதேவி, ஷீலா மற்றும் எம்.என் நம்பியார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சரோஜாதேவியுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்திருக்கிறார்.
பல்லாண்டு வாழ்க: கே ஷங்கர் 1975 ஆம் ஆண்டு பல்லாண்டு வாழ்க திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், லதா, விகே ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் என்ன சுகம் இது என்ன சுகம் என்ற பாடலில் நடிகையுடன் ரொம்பவே நெருக்கமாக உரசிக் கொண்டு கட்டிப்பிடித்து கவர்ச்சியுடன் நடனம் ஆடி இருப்பார்.
அடிமைப்பெண்: கே சங்கர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு அடிமைப்பெண் திரைப்படம் வெளிவந்தது. இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அசோகன், சந்திரபாபு மற்றும் மனோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் அன்றைய காலத்து இளைஞர்களை வசியம் செய்த பாடலாக எம்ஜிஆர் டூயட் போட்டு ஆடி இருப்பார்.
இப்படி எம்ஜிஆர் நடித்த இந்த படங்கள் அனைத்தும் ஒரே இயக்குனர்களால் இயக்கப்பட்டு நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார். இதனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் உடைய பெயருக்கு கொஞ்சம் அவமானமாக அமைந்தது. ஆனாலும் இவருடைய உண்மையான குணத்திற்கும் நடிப்புக்கும் என்றென்றும் இவருக்கு ரசிகர்கள் இருந்து கொண்டே தான் வருகிறார்கள்.