செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்த 5 படங்கள்.. லால் சலாம் படத்தில் நடிக்க போவதன் காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொத்தம் 167 திரைப்படங்கள் நடித்த நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் சில திரைப்படங்களில் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து அசத்துவார். தற்போது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் புக் ஆகியுள்ளார். இதனிடையே அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஆறு திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

அன்புள்ள ரஜினிகாந்த்: 1984ஆம் ஆண்டு இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் மீனாவும், நடிகர் ரஜினிகாந்த் இத்திரைப்படத்தில் உண்மையாகவே ஹீரோ ரஜினிகாந்த் ஆகவும் நடித்திருப்பார். அனாதை இல்லத்தில் வளரும் மாற்றுத்திறனாளியாக இருக்கும் சிறு வயது மீனா மீது ரஜினிகாந்திற்கு ஏற்படும் இனம் புரியாத அன்பும்,கடைசியில் மீனா உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ரஜினிகாந்த் அழும் காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை..

நன்றி மீண்டும் வருக: 1982ஆம் ஆண்டு சுஹாசினி, பிரதாப் போத்தன் நடிப்பில் வெளியான நன்றி மீண்டும் வருக திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பர். இதில் முக்கியமாக ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலருடன் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இத்திரைப்படம் தோல்வியுற்று இருந்தாலும் ரஜினிகாந்தின் நடிப்பு பேசப்பட்டது எனலாம்.

Also Read : ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

அக்னி சாட்சி: 1982 ஆம் ஆண்டு நடிகர் சிவகுமார், சரிதா உள்ளிட்டோரின் நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக ரிலீசான அக்னி சாட்சி திரைப்படம் நல்ல ஒரு ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தது போலவே கமலஹாசனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அவர்கள் நடிகர்களாகவே நடித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளி : 1993 ஆம் ஆண்டு நடிகை பிரியாராமன் நடிப்பில் வெளியான வள்ளி திரைப்படத்தை, இயக்குனர் நட்ராஜ் இயக்கியிருப்பார். இத்திரைப்படத்தை ரஜினிகாந்த் தயாரித்த நிலையில் இப்படத்தின் கதையும் அவரே எழுதி இருப்பார். மேலும் வள்ளியப்பன் வீரய்யா என்ற சிறப்பு தோற்றத்திலும் ரஜினிகாந்த் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read : லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்

குசேலன்: 2008ஆம் ஆண்டு பசுபதி, மீனா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான குசேலன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அசோக்குமார் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் தனது நண்பன் பசுபதியால் சூப்பர் ஸ்டாராக இன்று உயர்ந்து உள்ளதாக ரஜினிகாந்த் கண் கலங்கி பேசும் கிளைமாக்ஸ் காட்சி பெரிதும் பேசப்பட்டது.

லால் ஸலாம்: இயக்குனர் மற்றும் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள லால் ஸலாம் படத்தில் ஹீரோக்களாக விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்க உள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இதுவே ரஜினிகாந்த் தனது மகளின் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பத்து சதவீதம் கூட நிம்மதி இல்ல.. மேடையில் உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்

Trending News