ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போலீஸ் அதிகாரியாக ரஜினி மிரட்டிய 5 படங்கள்.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன வேட்டையன்

Rajini : ரஜினி தனது ஸ்டைல் மற்றும் நடிப்பின் காரணமாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 70 வயதை தாண்டியும் ஹீரோவாக மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் நடித்து வரும் ரஜினி போலீஸ் அதிகாரியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதில் சிறந்த ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூன்று முகம்

ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது தான் மூன்று முகம். இதில் அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருப்பார். அவருடைய உடை மற்றும் மிடுக்கு ஆகியவை போலீசுக்கு உண்டான தோரணையில் இருந்தது.

பாண்டியன்

நேர்மையான மற்றும் துணிச்சலான காவல் அதிகாரியாக பாண்டியன் திரைப்படத்தில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அவருடைய சமூகம் மற்றும் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராடும் கதை களத்தை இப்படம் கொண்டிருந்தது.

அன்புக்கு நான் அடிமை

இன்ஸ்பெக்டர் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் குற்றங்களுக்கு எதிராக போராடும் காவல் அதிகாரியாக ரஜினி நடித்த படம் தான் அன்புக்கு நான் அடிமை. இந்த படத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் குற்றத்திற்கு எதிராக ஒரு துணிச்சலான காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

தர்பார்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்த படம் தான் தர்பார். இப்படத்தில் மாஸ் லுக்கில் ரஜினியின் தோரணை பலரையும் கவர்ந்தது. ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க கூடும் என்பதில் இந்த படத்தில் காட்டப்பட்டிருந்தது.

வேட்டையன்

டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது வேட்டையன் படம். இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக ரஜினி நடித்திருக்கிறார். அதில் தவறான ஒரு என்கவுண்டர் அமைந்து விட அதன் பின்னால் இருக்கும் மர்மங்களை கொண்டு வேட்டையன் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

Trending News