திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்ரன் வில்லியாக மிரட்டிய 5 படங்கள்.. பொறாமையில் லைலாவை படாத பாடு படுத்திய பானு

Actress Simran Acted Negative role: எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சில நடிகைகள் தான் ரசிகர்களின் கனவு கன்னியாக கொண்டாடப்பட்டு வருவார்கள். அப்படி அனைத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சிம்ரன். ஹீரோயின்களாக நடிப்பிலும், ஆட்டத்திலும் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது என்று இருந்த நிலையில், வில்லியாகவும் என்னால் நடிக்க முடியும் என்று சில சில படங்களில் நடித்திருப்பார். அப்படி இவர் வில்லியாக மிரட்டிய படங்களை பற்றி பார்க்கலாம்.

நட்புக்காக: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நட்புக்காக திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், சிம்ரன், விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க நண்பர்கள் ஒருவரை மேல் ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்து படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் சிம்ரன் ஒரு சூழலில் சரத்குமாரை தவறாக புரிந்து கொண்டு இவர்களுடைய நட்பை பிரிக்க வேண்டும் என்பதற்காக வில்லத்தனமான சில செயல்களை செய்வார். குடும்ப வில்லியாக இதில் இவருடைய கேரக்டர் அமைந்திருக்கும்.

Also read: தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் 6 நடிகர்கள்.. ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார்

ஐந்தாம் படை: இயக்குனர் பத்ரி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு ஐந்தாம் படை திரைப்படம் வெளிவந்தது. இதில் சுந்தர்.சி, சிம்ரன், முகேஷ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் சிம்ரன், தேவசேனா கருணாகரன் கதாபாத்திரத்தில் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வில்லியாக நடித்திருப்பார். தன் ஆசைப்பட்ட ஒருவன் தன்னை விட்டு வேறொருவரை திருமணம் செய்ய சொல்லும் கோபத்தில் வில்லியாக மாறிவிடுவார்.

சீமராஜா: பொன்ராம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு சீமராஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிம்ரன் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் ரொம்ப முரட்டுத்தனமான வில்லியாக நடித்திருப்பார். இந்த மாதிரி ஒரு வில்லியை கனவு கன்னியாக இருந்த சிம்மரனிடம் எதிர்பார்த்து இருக்க மாட்டோம். அந்த அளவிற்கு கொடூரமான வில்லியாக இவருடைய நடிப்பை கொடுத்திருப்பார்.

Also read: நீதான் என் உயிர் என்று திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட 5 ஜோடிகள்.. சதியால் பிரிந்து போன சிம்ரன்

ஒன்ஸ்மோர்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிம்ரனின் அக்காவின் காதலை ஒருவர் உதாசீனப்படுத்தி அவருடைய இறப்பிற்கு காரணமாயிட்டார் என்று தவறாக புரிந்து, காதலிக்கிற மாதிரி நடித்து அவரை கொலை செய்யும் அளவிற்கு பழிவாங்க முயற்சி செய்திருப்பார்.

பார்த்தேன் ரசித்தேன்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2000 ஆண்டு பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசாந்த், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிம்ரன் பானு என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இதில் பிரசாந்த் மற்றும் சிம்ரனும் நண்பர்களாக பழகி வருவார்கள். இதற்கிடையில் லைலாவை பார்த்த பிறகு பிரசாந்துக்கு காதல் ஏற்பட்டுவிடும். இதை ஏற்க முடியாத சிம்ரன் பொறாமையில் வில்லியாக மாறி இவர்களுடைய காதலை பிரிக்க நினைப்பார்.

Also read: சிம்ரன், த்ரிஷாவுக்கு அப்புறம் நீங்க தான் டாப்பு.. 50 வயதிலும் பிரியா பவானிக்கு தூண்டில் போடும் இயக்குனர்

Trending News