வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்து நடித்த 5 படங்கள்.. சென்டிமென்டில் அசத்திய ரஜினி

சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் ஒவ்வொரு வகையான திரைப்படங்கள் பிடிக்கும். அதிலும் பெண்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் விரும்பி பார்ப்பது சென்டிமென்ட் திரைப்படங்களை தான். அந்த வகையிலான படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த திரைப்படங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. அப்படி தம்பிகளுக்காக ஹீரோ தியாகம் செய்யும் படியான ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் சிறந்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

Also read:ரஜினியை மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்த்த பிரபலம்.. சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட சூப்பர்ஸ்டார்

முரட்டுக்காளை எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினி, ரதி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தாய் தந்தை இல்லாமல் தன் உடன் பிறந்த நான்கு தம்பிகளை ரஜினி பாசத்துடன் வளர்ப்பது போன்று இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கும். மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தில் சென்டிமென்ட், லவ், ஆக்சன் என்று அனைத்தும் கலந்து இருக்கும்.

ஆறிலிருந்து அறுபது வரை எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவயதிலிருந்தே தம்பிகளுக்காக படிப்பை விட்டு விட்டு வேலை செய்யும் அண்ணன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார்.

உன் தம்பிகளுக்காக தியாகம் செய்யும் ரஜினியை ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் அவர்கள் உதாசீனப்படுத்தி விடுவார்கள். அதன் பிறகு ரஜினி எப்படி தன் வாழ்க்கையில் முன்னேறினார் என்பதுதான் இந்த படத்தின் கதை. முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

Also read:இணையத்தை உலுக்கிய அஜீத்தின் AK-61 பட போஸ்டர்.. துப்பாக்கி, கடுக்கனுடன் மிரட்டும் மாஸ் லுக்

தீ கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினி, ஸ்ரீபிரியா, சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினியின் தம்பியாக சுமன் நடித்திருப்பார். எதிரும், புதிருமாக இருக்கும் அண்ணன், தம்பி பற்றிய இந்த கதை ரசிகர்களை ரொம்பவும் கவர்ந்தது.

தர்மதுரை 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ரஜினி, சரண்ராஜ், கௌதமி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிராமத்து வெள்ளந்தியாக இருக்கும் ரஜினியை அவருடைய தம்பிகள் ஏமாற்றி விடுவார்கள். அதனால் அவர் பல கஷ்டங்களை அனுபவிப்பார். அதன் பிறகு அவர் தம்பிகளை என்ன செய்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

வீரம் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித், தமன்னா, நாசர் போன்ற பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தன் தம்பிகளுக்காகவே வாழும் அஜித் நிறைய தியாகங்களை செய்வார். அதேபோன்று தம்பிகளும் அண்ணனுக்காக எதையும் செய்வார்கள். இப்படி அண்ணன், தம்பி சென்டிமென்ட் கதையாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் அஜித் தன்னுடைய மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also read:80-களில் சினிமாவை கலக்கிய 2 நட்சத்திரங்கள்.. மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்த விசு

Trending News