ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட வடிவேலுவின் 5 படங்கள்.. உடன்பிறப்பிற்காக உயிரையே விட்ட ஹீரோ

நகைச்சுவையின் அரசனாக தமிழ் சினிமாவில் வலம் வரக்கூடியவர் தான் நடிகர் வடிவேலு. அதிலும் தனது உடல் அசைவு, பேச்சு மொழியின் மூலமே அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுத்தவர் என்றே சொல்லலாம். இப்படியாக அனைவரையும் சிரிப்பில் மட்டுமே ஆழ்த்திய இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து நம்மை உருக வைத்திருப்பார். அப்படியாக வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட  5 படங்களை இங்கு காணலாம்.

பொற்காலம்: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொற்காலம். இதில் முரளி உடன் மீனா, வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தில் முரளியின் நண்பனாக நடித்து சென்டிமென்ட் காட்சிகளில் அனைவரையும் கரைய வைத்திருப்பார்.

Also Read: வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

சங்கமம்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சங்கமம். இதில் ரகுமான் உடன் விந்தியா, விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் மிக அழகான காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்த இப்பபடத்தில் வடிவேலு ஹரிதாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார்.

காமராசு: பி சி அன்பழகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காமராசு. இதில் முரளி உடன் லைலா, வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் வடிவேலு முரளியின் நண்பராக வேலு என்னும் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

Also Read: வடிவேலுவை அப்பவே சோலி முடிச்சிருப்பேன்.. எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, கடுமையாக விமர்சித்த நடிகர்

எம்டன் மகன்: எம் திருமுருகன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எம் மகன். இதில் பரத் உடன் கோபிகா, நாசர், வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் வடிவேலு பரத்தின் தாய் மாமாவாக நடித்திருப்பார். ரத்த சொந்தம் என்ற பாச பிணைப்பினை மிக அருமையாக வெளிப்படுத்தி அனைவரையும் கண் கலங்க வைத்திருப்பார்.

ராஜகாளியம்மன்: ராமநாராயணன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான திரைப்படம் ராஜகாளியம்மன். இதில் வடிவேலு உடன் கரண், கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் வடிவேலு தனது தங்கையின் வாழ்க்கைக்காக தனது உயிரையே, தியாகம் செய்யும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கல்நெஞ்சையும் கரைய வைத்திருப்பார்.

Also Read: நாசருடன் காமெடியில் லூட்டி அடித்த வடிவேலின் 5 படங்கள்.. எம்டன்னை புரட்டி எடுத்த வைகை புயல்

Trending News